த
தக்கார்: அறிவு ஒழுக்கங்களால் தகுதி உடையார்
(திருக். 446. பரி.)
-
இற்
தகப்பன் : பிதாவை நாம் தந்தை என்றும் தகப்பன் என்றும் கூறுவோம். அண்ணனைத் தமையன் என்போம்; இளையவனைத் தம்பி என்போம். மூத்த சகோதரியைத் தமக்கை என்றும், இளைய சகோதரியைத் தங்கை என்றும் வழங்குவோம். தந்தை, தகப்பன், தமையன், தமக்கை, தம்பி, தங்கை சொற்களின் பிறப்பு முறையில் ஓர் ஒற்றுமை இருக்கக் காண் கின்றோம் அல்லவா ! தம் என்ற சொல்லின் அடியாக இப் பதங்கள் பிறந்தனவாகத் தோன்றுகின்றன. ஆனால், தகப்பன் என்னும் பதத்தில் மட்டும் ககரம் எப்படி வந்தது என்று சிறிது திகைக்கின்றோம். மலையாளம் அம்மயக்கத்தைத் தீர்க்கும் தமப்பன் என்கிறார்கள். ஆகவே அப்பன் என்பது தமப்பன் என்றாகித் தமிழில் தகப்பன் ஆயிற்றென்று அறிந்து கொள் கிறோம். (தமிழ்விருந்து. 97.)
தகு: தகு, மிகு, அறு,உறு, இறு முதலிய பகுதிகள் தகவு, மிகவு, அறவு, உறவு, இறவு முதலியனவாய் நின்று பெயராகும். தகவு நடு நிலைமை. மிகவு மேம்பாடு. அறவு அற்றம்; உறவு - சுற்றம். இறவு - மரணம்.
-
-
தகு, நகு, படு, பகு முதலிய சிலபகுதிகள் அல், ஐ முதலிய விகுதிகள் பெற்றுத் தகல், தகை, நகல், நகை, படல், படை, பகல், பகை முதலியனவாய்ப் பெயராகும். (செந்தமிழ். 11: 43)
தகுதி: தகுதி என் தகுதி என்பது அப்பொருட்குரிய சொல்லால் சொல்லுதல் நீர்மை அன்று என்று அது களைந்து தக்கதோர் வாய்பாட்டால் கூறுதல். அது செத்தாரைத் துஞ்சினார். என்றலும், சுடுகாட்டை நன்காடென்றலும், ஓலையைத் திரு முகமென்றலும், கெட்டதனைப் பெருகிற்றென்றலுமென இத் தொடக்கத்தன. (தொல். சொல். 17. சேனா)
தட்டை: (1) தட்டப்படுதலின் தட்டை என்றார்.
(மதுரைக். 305. நச்)