சொற்பொருள் நுண்மைவிளக்கம்
143
(2) தட்டையாவது மூங்கிலைக் கணுக்கள் கணுக்கள் உள்ளாக நறுக்கிப் பலவாகப் பிளந்து ஓசை உண்டாக ஒன்றிலே தட்டுவ தோர் கருவி. (குறிஞ்சிப்பாட்டு. 43. நச்)
தடம்: (1) தடம் - அகலமுடையது. “தடவும் கயவும் நளியும் பெருமை” - தொல்காப்பியம். (வடசொற்றமிழ் அகரவரிசை. 303.)
(திருக்கோ. 4. பேரா)
(2) தடம் - உயர்ந்த இடம். தண்டாரணியம்: தண்டகாரணியம் என்பதன் சிதைவு. "தண்டாரணித்துத் தாபதப் பள்ளி" (சீவக.337)
(பதிற்று. பதிகம். 6. ப.உ )
தண்டை: கையில் காப்புக்கட்டியதுபோலவே காலிலும் தடை கட்டினார்கள். அத்தடைதான் தண்டை என்று பெயர் பெற்றது. பூடு என்பது பூண்டு என்றும், அடு என்பது அண்டு என்றும் வழங்குதல் போலவே தடை என்பது தண்டை ஆயிற்று. (தமிழகம் அலையும் கலையும். 177.)
தண்ணுமை: மிருதங்கம் எனக் கூறப்பெறும் தோற் கருவியே 'தண்ணுமை என நம் பண்டையோரால் வழங்கப் பெற்றதென ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். (பாணர் கைவழி. 36.)
வ
தபலா: வடஇந்திய இசைப்பாட்டுக்களில் தபலா முக்கிய இடம் பெற்றிருக்கிறது. தபலா என்னும் பெயரே தமிழ்ச் சொல்லின் திரிபு. பதலை என்னும் தமிழ்ப்பெயர் தபலா என்று திரிந்து வழங்குகிறது.
பதலை என்பது சங்ககாலத்தில் வாசிக்கப்பட்ட ஓர் இசைக் கருவி (தோற்கருவி)
தபலாவுக்கு ஒருபக்கம் மட்டும் தோல் மூடிக் கட்டப் பட்டிருப்பதுபோலவே பதலையும் ஒரேபக்கம் தோல் மூடி மூடிக் கட்டப்பட்டிருந்தது. இதனை ‘பதலை ஒருகண் பையென இயக்கு மின்" (புறம். 152) என்று கூறப்படுவதிலிருந்து அறியலாம். புறநானூற்றுப் பழைய உரையாசிரியர் ‘பதலை என்பது ஒரு தலை முகமுடையதோர் தோற்கருவி" என்று சந்தேகத்துக்கு டமில்லாமல் எழுதியிருப்பது காண்க.
(அஞ்சிறைத்தும்பி. 113 - 117)
தபு: (1) இது படுத்துச் சொல்ல நீ சா எனத் தன் வினையாம். எடுத்துச் சொல்ல, நீ ஒன்றனைச் சாவி எனப் பிறவினையாம். (தொல். எழுத்து. 77. இளம்.)