144
இளங்குமரனார் தமிழ் வளம் – 3
(2) இது படுத்துக் கூற நீ சாவெனத் தன்வினையாம். எடுத்துக் கூற நீ ஒன்றனைச் சாவப்பண்ணெனப் பிற வினையாம். (தொல். எழுத்து. 76. நச்)
தமிழ்: (1) தமிழ் என்றது வடவெழுத்தொரீஇ வந்த எழுத்தானே கட்டப்பட்ட வாக்கியக் கூறுகளும், இயல், இசை, நாடகங்களும் என்று சொல்லப்படா நின்ற மூன்று தமிழ்களும். (சிலப். 3-45. அரும். அடியார்.)
(2) தமிழ் என்பதற்குத் தமிழ் நாடு எனினும் அமையும்.
(புறம். 50. ப.உ)
(3) தமிழ் மொழிக்குத் 'திராவிடம்’ என்ற பெயர் பிற் காலத்தில் வந்தது. இந்நாட்டுப் பிறமொழியாளர் தமிழை அங்ஙனங் கூறினர். இற்றைக்கு இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த ஒரோடட்டசு (Horodatus) முதலிய பழைய கிரேக்க ஆசிரியர், இந்நாட்டைப் பற்றிக் கூறியபோது ‘தமிழ்’ என்னுஞ் சொல்லையே வழங்கி இருக்கின்றனர்.
(சங்கநூற் கட்டுரைகள். I. 14-5.)
(4) தமிழ் என்னும் பெயர் முதலில் எப்படி வந்தது என்ப தும் இங்கே சிறிது நினைவு கூர்வது நல்லது. 'தமி' என்னும் சொல்லுக்குத் தனிமை என்பது பொருள்.தமிழுக்குச் சிறப் பெழுத்தாக உள்ள ‘ழ்” என்னும் ஓர் இடையின எழுத்தைத் ‘தமி’ என்பதனோடு சேர்த்துத் 'தமிழ்' என்று முன்னோர் வழங்கின ரென்று தெரிகின்றது. வேறொரு மொழியில் இருந்து தோன்றா மல் தனித்துத் தோன்றியது என்பது அதற்குப் பொருள்.
(சங்க நூற் கட்டுரைகள். I 12)
(5) தமிழ் எது? மொழியா? அன்று; நாடா? அன்று. பின்னை எது? வாழ்க்கை. தமிழ் வாழ்க்கை இயற்கையோடு இயைந்து ஒழுகுவது.
இயற்கையோடு இயைந்து ஒழுகுவோர் எவராயினும் ஆக. அவர் தமிழ் வாழ்க்கையினரே ஆவர். திருவள்ளுவர். ஷெல்லி, தாகூர் முதலியோர் தமிழ் வாழ்க்கையினர் என்று கூறல் மிகை யாகாது. (திரு. வி. க. வாழ்க்கைக் குறிப்புக்கள். 125.)
டைப்
(6) தமிழில் வல்லோசையும் மெல்லோசையும் இடை பட்ட ஓசையும் சிறந்திருத்தலின் அம்மூவினத்தால் தமிழ் எனப் பட்டது எனலுமாம். த - வல்லினம். மி. மெல்லினம். ழ்- இடை யினம். (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 2 -388)