உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

இளங்குமரனார் தமிழ் வளம் – 3

ச்சொல் முதலில், தம்பின், என்றிருந்து, பின் ‘தம்' என்ற சொல்லை எடுத்து மிக்கொலித்தலான் ‘ன்’ நலிந்து கேடுற்றுப் பின் தம்பி ஆயிற்று. 'எம் + பின்' னும், 'உம்+பின்' னும் அங்ஙனமே எம்பி, உம்பி ஆயின. அங்ஙனம் அன்றி எம் + தம்பி எம்பி ஆயிற்றெனக்கோடல் சாலாது அப்படிக் கோடல் ‘தம்பி’ யின் உண்மை வடிவினைக் காணாதார் செய்கையாம். தெலுங் கில் ‘தம்பினுகி' என்று வேற்றுமை உருபேற்றவிடத்து வழக்கில் இருப்பதைக் காண்க.

தம் + ஐ = தம்மை: அம்மை; தன் + ஐ = தன்னை: அன்னை. ஐ' சிறப்பையும், சிறப்பினை உடையவரையும் சுட்டுகின் ஐயை என்ற பண்டையோர் கூற்றுமிங்கு நோக்கத்தக்கது. தமக்கை தங்கை தம்மோய் முதலிய சொற்களிலும் தன்மைப் பெயரின் புணர்ச்சியைக் காணலாம். ஆதலின் தான் உண்ணும் உணவினும், போற்றும் உயிரினும் தம்மொழியைச் சிறப்புடைய தாகக் கருதிய தமிழ் நன்மக்கள் தாம் வழங்கு மொழிக்கு உரிமையான் 'தம்மொழி' எனப் பெயரிட்டார்கள் என்றும், தம்மொழியே காலச்செலவில் ‘தமிழ்' என்று ஆயிற்றென்றும் கூறுதல் தகும். (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 3: 10 -11)

(10) அமிழ்தினும் இனிய தமிழ் மொழியைத் தமிழர் அமிழ்து எனப் பெயரிட்டார் என்றும் அமிழ்து காலச் செலவில் தமிழ் ஆயிற்றென்றும் ‘அமிழ்து' ‘அமிழ்து' எனப் பன்முறை அடுக்கிக் கூறின் இயல்பாகவே 'அமிழ்து’ ‘தமிழ்’ ஆகின்றது என்றும் கூறி மகிழ்கின்றார். இக்கொள்கை தானும் தோற்றத்தில் காணப்படுவதுபோல் அத்துணை உண்மை உடையதில்லை, அமிழ்தும் அமிர்தம் என்ற வடசொல்லின் திரிபு எனக்கோடல் பொருந்தும் ஆகலானும், மீட்டும் வடசொற் பேராலேயே வடிமொழியாளர் கலப்பின் பின்னே தம் மொழிக்குப் பேரிட் டார் எனக் கோடல் வேண்டு மாகலானும் அங்ஙனம் கோடல் பொருந்தாது ஆகலானும். (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 3: 9–10) ழு இ

L

(11) தமிழ் என்ற சொல் தம் + இழு (ம்) என்ற இரண்டு தமிழ்ச் சொற்களின் சேர்க்கையாற் பிறந்த சொற்றொடராம் எனக் கருத இடம் உண்டு. இனிய ஓசை தழுவிய சொற்களும், இயல்புகளும் உடைய தம்மொழிக்குத் 'தமிழு' எனப் பெய ரிட்டனர் என்றும் அது ‘தம்’ எனும் சொல்லை எடுத்து ஒலித்த லினால் இறுதிக் கண்ணுள்ள உகரம்’ நலிந்து கேடுற்றுத் தமிழ், என்றாயிற் றென்றும் கொள்ளினும் இழுக்கில்லை. "இழுமென் மொழியான்' எனப் பண்டையோர் கூற்றும் இங்கு நோக்கத் தக்கது. (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 3; 10)