154
இளங்குமரனார் தமிழ் வளம் - 3
செய்தியை உணர்த்தி நிற்குமிடத்தை ஐயமறக் காட்டுவதற்குத் தகர ஒற்று நகர ஒற்றாயிற்று. (செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 2: 139)
துதிக்கை: யானையின் கையைத் துதிக்கை என்றும் வழங்குவர். துகி என்ற சொல் சங்க நூல்களில் நீர்ப்பறவைகளின் விரல்களுக்கு இடையே உள்ள சவ்வுத் தோலைக் குறித்து வழங்கும். யானைக்கும் தும்பிக்கையின் நுனியில் தோலுடன் ஒருவிரல் போன்ற உறுப்புக் காணப்படுவதால் அதைத் துதிக்கை என்றனர். (சங்க இலக்கியத்தில் விலங்கிண விளக்கம். 282)
தும்பி: ஊன்தேர் வாழ்க்கை யுடையது, புறஞ்சிறை யுடையது. தேன் தேர் வாழ்க்கைத் தும்பி அகஞ் சிறையுடையது. (குறுந்தொகை விளக்கம். 2)
துலாக்கோல்: துலா + கோல் = துலாக்கோல். துலா துலாக்கோல் போன்ற ஏற்றம். கைத்துலா, ஆள் ஏறுந் துலா என்பன தொன்று தொட்ட வழக்கு.
(புறநானுற்றுச் சொற்பொழிவுகள். 355.)
-
துவலை: துவலை, தூவ விழும் நீர்; பெருந்துளி. திவலை (ஐங்குறு. 141. ஔவை. சு. து.)
சிறுதுளி.
துளை: தொள் என்னும் முதனிலையிற் பிறந்த தொளை என்னுஞ் சொல் துளை எனத் திரிந்தது.
(திருவாசக விரிவுரை. மறைமலை. 313.)
துளைப்பொன்: காய்ச்சி உருக்கினும் மாற்றும் நிறையும் குன்றாதது என்று அதிகாரிகளால் ஆராய்ந்து உறுதி செய்யப் பட்டதற்கு அடையாளமாகத் துளையிடப் பெற்றது துளைப் பொன். (இது சோழர் காலத்தில் வழங்கியது)
(முதற் குலோத்துங்க சோழன். 90.) துறந்தார்: பிறர் நலம் பேணுவதற்காகத் தன்னலத்தை (திருக். 42. சி. இலக்.)
விட்டவர்.
துறைவகை: துறைவகை என்பது, முதலும் கருவும் முறை பிறழ வந்தாலும் இஃது இதன் பாற்படும் என்ற ஒரு துறைப் படுத்தற்கு ஏதுவாகியதோர் கருவி அச் செய்யுட்கு உளதாகச் செய்தல். அவையும் பலவாதலின் ‘வகை' என்றான் என்பது.
துனி: பெரும் பிணக்கு.
(தொல். பொருள். 313. பேரா.)
(திருக். 1306. ப. உ)