உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

155

தூ

தூக்கு-நூறுபலம்.

தூக்கு: (1) தூக்கு- நூறுபலம். அஃதாவது ஒரு நிறை ஒன்றின் நிறை இது வனக் காண வேண்டுமாயின் அது மண்ணில் இருந்து மேலே தூக்கப்படும். மண்ணில் இருக்கும் வரையில் அதன் எடை விளங்காது. எடை இது 'எடு' என்ற முதனிலை

-

யடியாகப் பிறந்தது. எடுத்தலளவை - இதில் ‘எடு' என்பதை நோக்குக. (மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுரைகள். 88.)

(2) தொடை தூங்கித் தொடர்ந்து இசைத்தலின் தூக்கு எனப்படுமே. (தூங்குதல் - செறிதல் ; தூக்கு -பா).

(யா. வி. 1)

(3) தூக்கு என்பது, பாக்களைத் துணித்து நிறுத்துதல்.

(தொல். பொருள். 313. பேரா.)

(4) தூக்கு - செய்யுள். அஃதாவது இயல்பாய் நாம் பேசும் பேச்சில் இருந்து உயர்த்தப்பட்டு விளங்குவது. மேம்பட்டது. தூக்கு - கூத்து. கால் தூக்கி ஆடிய அம்பலக் கூத்து. கழையின் நுனியில் நின்றாடுங் கழைக் கூத்து முதலியவற்றான் உணர்ந்து கொள்க.

66

(5) தூக்கு - ஆராய்தல். இது முன் பொருளில் இருந்து இயற்கையாய்ப் பிறப்பது. நிறுத்துப் பார்த்ததில் இருந்து ஏற்றத் தாழ்ச்சியை உற்று நோக்கும் ஆராய்ச்சி என்ற பொருள் தோன்று வது வியப்பன்று. (மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுரைகள். 83.) தூக்கு: காலையாளி தூக்குண்ட ான்" என்பதில் பொருள் வெளிப்படை. ஆனால் தூக்கம் - உறக்கம் என்பதின் குறிப்பு யாது? ஆழ்ந்த உறக்கம் சாவைப் போன்றது. அஃது உயிர்த்தலும் அன்று. சாதலும் அன்று. விசும்பிற்கும் மண்ணிற் கும் இடையே மரக்கிளை ஒன்றில் அல்லல் படுபவன் தொங்கு கிறான். உயிருக்குஞ் சாவிற்குமிடையிலுள்ள நிலையில் இருப்ப வன் தூங்குகிறான்.

(மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுரைகள். 83.)

தூண்: துண் - தூண் = துணிக்கப்பட்ட கல். தூண்+அம் = தூணம்- ஸ்தூணம் (வடசொல்)

(புறநானூற்றுச் சொற்பொழிவுகள். 355)