சொற்பொருள் நுண்மைவிளக்கம்
157
தெ
-
தெங்கு: தெற்கில் இருந்து, பெரும்பான்மையாக இலங்கை யில் இருந்துதான், மலையாள நாட்டிற்குத் தென்னை கொண்டு வரப்பட்டதெனத் தெரிகிறது. தெற்கிலிருந்து வந்ததால்தான் அதற்குத் தென்கு. தெங்கு (தென் தெற்கு; கு- பொருட் சிறப்புணர்த்தும் உறுப்பு) தென்னை எனப் பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும். கடற்கரையில் தாழைபோல் மிகுதியாய்ப் பயி ராகும் காரணத்தால் தென்னைக்குத் தாழை என்ற பெயரும் கடற்கரையில் தழைத்து வளர்வதென்னும் பொருள் பட ஏற் பட்டிருக்கலாம். (சங்ககாலச் சிறப்புப் பெயர்கள். 233 - 34)
தெய்வம்: மலையில் மூங்கில் ஒன்றோடு ஒன்று தேய்வ தனால் தீ உண்டாகிறது. கல்லைச் செதுக்கும் போது தீப்பொறி தோன்றுகிறது. இவற்றிலிருந்தே முதன் மாந்தர் தீக்கடை கோலும் சக்கி முக்கிக் கல்லும் கண்டுபிடித்திருக்கவேண்டும். பொருள்கள் ஒன்றோடு ஒன்று தேய்வதனால் தீ உண்டாவதால் பழங்காலத் தமிழ் மக்கள் அதைத் தேய் என்றனர்..... தேய் என்பதே நாளடைவில் தேய்-தே-தீ எனத் திரிந்தது...... தேய் என்னும் சொல்லின் அடியாகப் பிறந்தவையே தேவன், தேவி, தேவர், தெய்வம் என்னும் சொற்கள்.
(திருக்குறள். குழந்தையுரை. முன்னுரை. 22.) தெற்றி: வேதிகை; தெற்றி என்பதனைக் கைகோத்தாடும்
குரவை என்பாரும் உளர்.
(புறம். 53 ப. உ.)
(புறம் 119. ப. உ)
தெறுள் என்றது காட்டகத்து ஒரு கொடி;
தெறுள்:
புளிமா என்று உரைப்பாரும் உளர்.