உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

இளங்குமரனார் தமிழ் வளம் – 3

3

தே

தேசிகம்: தேசிகம் என்றது இயற்சொல், திரிசொல், திசைச் சொல், வடசொல் என்று சொல்லப்படாநின்ற சொற் ( சிலப். 3 : 47. அரும்.)

பிரயோகம்.

தேயம்: தனித் தமிழ்ச்சொல். தேம் என்பது ‘தேஎம்’ என்று ஆகிப் பிறகு, 'தேயம்' என்று ஆகியது. பின்னர், ‘தேசம்’ ஆ கிவிட்டது. இப்பொழுது தேசம் என்பதுதான் வழக்கில் உள்ளது. வடசொல் என்று கருதுகின்றனர். அது தவறு.

(வள்ளுவர் வகுத்த அரசியல். 39)

தேவாங்கர்: பலவகை ஆடைகளுள் தேவாங்கு என்பது ஒருவகை ஆடை. அதனை நெய்தவர் தேவாங்கர் எனப்பட்டனர். (தமிழர் நாகரிகமும் பண்பாடும். 13.)

தேவாரம்: தே+வாரம்=தேவாரம் ஆயிற்று. தே = கடவுள். வாரம் = வாரப்பாடல். அஃதாவது, தேவனைப் போற்றும் வார நடையினையுடைய பாடல் எனப் பொருள்படும். இத்தேவாரப் பாக்களை நாம் பிறர்பாடக் கேட்கும்போது கவனித்தால் பாடப்பட்ட பாக்களில் ஒவ்வொரு சொல்லையும் நாம் நன்கு காதால் உட்கொள்வதோடும் அவற்றின் நற் பொருள்களை நம் உள்ளத்தில் உணர்ந்து களிக்கப் போதுமான கால அளவை யோடும் கூடிய தகுந்த நடையாகவே இருக்கின்றன என்பதை அறிவோம். இதற்குக் காரணம் அவ்வார நடையேயாம்.

(பாணர் கைவழி. 11.)