உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

இளங்குமரனார் தமிழ் வளம் 3

நிலவு: குளிர்ந்த ஒளியினை நிலவு எனத் தமிழ் நூலார் கூறக் காண்டலாற், குளிர்ந்த ஒளியினைத் தருந் திங்களும் நிலவு எனப் பெயர் பெறுவதாயிற்று. அம்புலி என்னும் சொல் சிறு மகாரால் இடப்பட்டதாகும். பிறை என்பது மறை நிலா நாளின் பிற் பிறந்த சிறு திங்களுக்குப் பெயராக வழங்குகின்றது; புதிது பிறத்தலிற் பிறை எனப்பட்டது. உயிர்கள் உடம்புகளில் நிலை பெற்று வளர்தற்குரிய அமிழ்து நிலவொளியிலிருந்து வருத லாலும், அவ்வமிழ்து தமிழிற் ‘கள்’ எனப்பெயர் பெறுத லாலும், இனிமை எனப் பொருள் தரும் தீம் என்னுஞ் சொற் குறுகித் திம் என நின்று கள் என்னுஞ் சொல்லோடு கூடித் திங்கள் என அதற்குப் பெயராயிற்று. தண்கதிர் என்பது அது குளிர்ந்த ஒளியினைத் தருதலால் வந்த பெயராகும். கலையோன் என்பதிற் கலையென்பது நிலவொளியின் ஒரு பகுதியைக் குறிக்கும்; நாளுக்கு ஒரு கலையாக வளர்தலுந் தேய்தலுமாகிய தோற்றந் திங்களிற் காணப்படுதலால் அதற்குக் கலையோன் எனும் பெயர் போந்தது. இராப் பொழுதில் விளங்குதல் பற்றி அஃது இரவோன், அலவன், அல்லோன் எனும் பெயர்களைப் பெற்றது; அலவன், அல்லோன் என்பவற்றின் முதல்நின்ற அல் என்னும் சொல் இராக்காலத்துக்குப் பெயராகும். இனி, அது பதினான்கு நாள் வளர்ந்தும், பதினான்கு நாள் தேய்ந்தும் இருபத்தெட்டு நாள் கொண்ட ஒரு காலத்தை வரையறுத்தலால். ங்ஙனம் திங்களால் வரையறுக்கப் படுதல் பற்றி இருபத் தெட்டு நாள் கொண்ட ஒருகாலவளவுந் (Lunar Month) திங்களெனச் சொல்லப்படும். திங்களை வடநூலார் 'மாசம்' என்பர். இன்னும் அஃது இடையிடையே கறையுடையதுபோற் காணப்படுதலாற் களங்கன் என வழங்கப்படுகின்றது. குரங்கு என்னுஞ் சொல் வளைவு எனப் பொருடருதலால் வளைந்து தோன்றும் பிறை குரங்கு எனப் பெயர் பெற்றது. இனித் திங்களிற் காணப்படும் கறை சிறுமகார் கண்களுக்கு முயல் வடிவாகத் தோன்றுதலிலிருந்து அவர் அதனை முயல் உறையுங் கூடாக வழங்க, அதனால் முயற்கூடு என்னும் பெயரும் அதற்கு உள தாயிற்று. (இளைஞர்க்கான இன்றமிழ். 1 -2.)

நிறை: (1) நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை.

(கலி. 133)

(2) நெஞ்சைக் கற்பு நெறியில் நிறுத்துதல். (திருக். 57. பரி.) (3) காப்பன காத்துக் கடிவன கடிந்து ஒழுகும் ஒழுக்கம்.

(திருக். 155. மணக்.) (இறை. 2. நச்.)