சொற்பொருள் நுண்மைவிளக்கம்
177
நீர் நிலைகட்குள் கடலே பெரிதாகவும், ஏனையவற்றிற் கெல்லாம் மூலமாகவும் இருப்பதால் நீர் என்னும் சொல் சிறப்பாகக் கடலையே குறிக்கும். கடல் நிறம் நீலமாயிருப்பதால் நீர் என்னும் சொல்லினின்றும் நீலக்கருத்தும் நீல் என்னும் சொல்லும் பிறந்தன.
“கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும்”
66
கடல் வண்ணம்”
(சிலப். 10: 116.)
(சிலப். 17: 126.) (வடமொழி வரலாறு. 191.)
நீறு: நீறு என்பது தூளைக் குறிக்கும். நெருப்பின் துணை யால் பொடியாவன எல்லாம் நீறு என்னும் சொல்லுக்குரியன. ஆனால் காலப் போக்கில் நெற்றியில் அணியும் சிவ அடையாள மாகிய விபூதியையே குறிக்கத் தொடங்கி விட்டது. ‘நீறு இல்லா நெற்றி பாழ்.' இங்கு நீறு என்பது விபூதியே. பின்னர் அதன் உயர்நிலைக்கு ஏற்பத் திரு என்ற அடை சொல்லும் சேர்த்துத் திருநீறு என்றே அழைக்கும் வழக்கம் ஏற்பட்டு விட்டது.
(பழந்தமிழ். 70.)