உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

3

இளங்குமரனார் தமிழ் வளம் – 3

நு

நுணவம்: நுணவம் - நுணாமரம். நுணா - ஈற்று ஆகாரம் குறுகி அம் சாரியை பெற்றது. அரா - அரவம் எனவும், நறா - நறவம் எனவும் வருதலுங் காண்க.

(ஐங்குறு. 342. விளக்கம். பெருமழை.)

நுந்தை: நுந்தை முன்னிலை முறைப்பெயர்; தை முறைப் பெயர் ஈறு; நும்தந்தை என்பது திரிந்ததன்று; “குற்றியலுகர முறைப்பெயர் மருங்கின் என்னும் சூத்திரத்தை நோக்குக.

(தொல். எழுத்து. 34.)

(திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை. 119.)