சொற்பொருள் நுண்மைவிளக்கம்
179
நூ
நூல்: (1) நூல் என்ற சொற்குப் பொருள் உரைக்கு மாறு: நூல் போறலின் நூல் எனப்படும். என்னை? பாவை போல் வாளைப் பாவை என்றாற்போல. (யா. வி. பாயிரம்.)
(2) நூல் என்பது நூல் போறலின் ஒப்பின் ஆயதோர் ஆகுபெயராம். அவ்வொப்பாயவாறு என்னை எனின், குற்றங் களைந்து எஃகிய பன்னுனைப் பஞ்சிகளை எல்லாம் கைவன் மகடூஉ தூய்மையும் நுண்மையும் உடையவாக ஓர் இழைப் படுத்தினாற்போல “வினையின் நீங்கி விளங்கிய அறிவ”னாலே வழுக்களைந்து எஃகிய இலக்கணங்கைள யெல்லாம் முதலும் முடிவும் மாறுகோள் இன்றாகவும், தொகையினும் வகையினும் பொருண்மை காட்டியும், உரையும் காண்டிகையும் உள்நின்று அகலவும், ஈரைங்குற்றமும் இன்றி ஈரைந்தழகு பெற முப்பத்தி ரண்டு தந்திர உத்தியொட புணரவும், 'ஒரு பொருள் நுதலிய சூத்திரத்தானும். இனமொழி கிளந்த ஓத்தினானும், பொது மொழி கிளர்ந்த படலத்தானும், மூன்றுறுப்படக்கிய பிண்டத் தானும்" ஒரு நெறிப்படப் புணர்க்கப் படூஉம் தன்மை உடைமை (தொல். எழு. 1. நச்.)
யான் என்க.
(3) நூல் போறலின் நூல் என்ப, பாவை போல் வாளைப் பாவை என்றாற்போல. நூல் போறல் என்பது, நுண்ணிய பலவாய பஞ்சின் நுனிகளால் கைவல் மகடூஉத் தனது செய்கை நலந்தோன்ற ஓர் இழைப்படுத்தல் ஆம் உலகத்து நூல் நூற்றல் என்பது. அவ்வாறே, சுகிர்ந்து பரந்த சொற் பாவையால் பெரும் புலவன் தனது உணர்வு மாட்சியில் பிண்டம், படலம், ஓத்துச் சூத்திரம் என்னும் யாப்பு நடைபடக் கோத்தல் ஆயிற்று, நூல் செய்தலாவது, அவ்வகை நூற்கப்படுதலின் நூல் எனப்பட்டது. (இறையனார். 1. நச்.)
நூல்நடை: நடை என்பது தமிழிலே ஒழுக்கத்துக்குப் பேர், செல்லும் செலவிற்குப் பேர்.... நூல் நடையாவது நூல் செல்லும் செலவு, நூற்பொருள் செல்லும் செலவு என்பதாம். கால் நடையின் நோக்கமாவது ஒருவன் ஓரிடத்திருந்து பிறி தோரிடத்துச் சென்று சேர்தல். நூல் நடையின் நோக்கமாவது ஒரு கருத்து ஒருவன் மனத்திருந்து பிறனொருவன் மனத்துச் சென்று சேர்தல். (செந்தமிழ். 5-13.)