சொற்பொருள் நுண்மைவிளக்கம்
187
தொல்காப்பிய நூற்பாவில் படிமை என்னும் இச்சொல் நிலத் தின் தன்மையைக் குறித்து நின்றது. ‘படியுடையார் பற்றமைந் தக் கண்ணும்' எனவருந் திருக்குளிற் படி என்னுஞ் சொல், நிலம் என்னும் பொருளில் வழங்கியுள்ளது. நிலத்தியல்பால் நீர்மை திரிதலின் படி என்பது தன்மை என்னும் பொருளிலும் வழங் குவதாயிற்று. 'இப்படியன் இந் நிறத்தன்' என்பது திரு நாவுக்கரசர் தேவாரம். 'பணிலம் வெண்குடை அரசெழுந்த தோர் படியெழுந்தன' என்பது சிலப்பதிகார மங்கல வாழ்த்துப் பாடல். ‘ஏசும் படியோர் இளங்கொடியாய்' என்புழிப் படி என்பதற்கு ‘வடிவு' என அடியார்க்கு நல்லார் பொருள் கூறி யுள்ளார். 'பாரோர் காணாப் பலர்தொழு படிமையன்' எனச் சிலப்பதிகாரத்திலும் மணி மேகலையிலும் முறையே சார ணனது வடிவமும், விஞ்சையனின் வடிவமும் சிறப்பித்துரைக்கப் பட்டன. படிமை, படிவம் எனவும் வழங்கும். 'தண்டோடு பிடித்த தாழ் கமண்டலத்துப், படிவ வுண்டிப் பார்ப்பன மகனே' என்பது குறுந்தொகை.
இதுகாறுங் கூறியவாற்றாற் படிமை என்னுங் சொல் நிலம் என்னும் பொருளுடைய படி என்னுஞ் சொல்லினை முதனிலை யாகக் கொண்டு தோன்றிய தனித்தமிழ்ச் சொல்லே என்பதும் அச்சொல் தன்மை என்னும் பொருளில் யாவரானும் பொது வாக வழங்கப்பெற்று வருவதென்பதும், அதுவே பின்னர்ச் சிறப்புடைய தவவேடத்தியல்பினையும் குறித்து வழங்கலாயிற் றென்பதும், அது படிமா என்னும் பிராகிருதச் சொல்லின் திரிபன்று என்பதும், படிமை என்னும் பழந்தமிழ்ச் சொல்லே பிராகிருத மொழியிற் படிமா எனச் சிதைந்து வழங்கியிருத்தல் வேண்டுமென்பது நன்கு புலனாகும்.
(தமிழிலக்கிய வரலாறு. தொல்காப்பியம். 84-85) >
படிவம்: படிவு > வடிவு, படிவம் > வடிவம். படிதல் - விழுதல், பதிதல். படிவு = ஒன்றின்மேல் ஒன்று பதிதல். படிவம் = பதிந்த உருவம். (புறநானூற்றுச் சொற்பொழிவுகள். 356.)
படைமடம்: படைமடம் என்றது வீரர் அல்லாதார் மேலும், முதுகிட்டார் மேலும், புண்பட்டார் மேலும், மூத்தார் இளை யார் மேலும் செல்லுதல்.
(புறம்: 142. ப. உ.)