உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

இளங்குமரனார் தமிழ் வளம் – 3 3

பண்: (1) பண் என்றது நரப்படைவால் நிறந்தோன்றப் பண்ணப்படாநின்ற பண்ணும், பண்ணியற் றிறமும், திறமும் திறத்திறமும். (சிலப் - 3: 46. அரும், அடியார்.)

(2) பாவை நன்கு பண்ணி உயர்த்தித் தாழ்த்தி மட்டஞ் செய்து பாடும்போது உண்டாகின்ற அலங்காரங்கள் பண். பண் என்பது செவிக்கினிமையாகப் பண்ணப்படுவது என்பது வெளிப்படை. (திருக்குறள் அமைப்பும் அழகும். 119)

பண்ணத்தி: மெய் வழக்கு அல்லாத புற வழக்கினைப் பண்ணத்தி என்ப. இஃது எழுதும் பயிற்சி இல்லாத புற உறுப்புப் பொருள்களைப் பண்ணத்தி என்ப என்பது. அவை யாவன: நாடகச் செய்யுள் ஆகிய பாட்டுமடையும், வஞ்சி பாட்டும், மோதிரப்பாட்டும் கடகண்டும் முதலாயின.

(தொல் பொருள். 492. பேரா.)

பண்ணியம்: தின்பண்டங்கள் வட்டம், உருண்டை, தட்டை முதலிய பலவேறு வடிவங்களில் விரல்களை இயக்கிப் பண்ணப் படுதலின் அவை பண்ணியம் எனப்பட்டன.

(திருவொற்றி முருகர். 143.)

பண்ணை: பண்ணை என்பது தொகுதி. இஃது இப் பொருட்டாதல் ‘ஒலித்தன முரசின் பண்ணை என்னும் கம்ப ரின் செய்யுளடியாற் றெளிக. பலமுளை ஒருங்கு கிளைக்கும் ஒரு தட்டைத் தூறும் உறவினர் செறிந்த ஒரு பெருங்குடியும், உறுப்பி னர் நிறைந்த ஒரு கழகமும் தொகுதிபற்றிப் பண்ணை எனப் படுதலானும் அறிக. (தொல். பொருள். மெய்ப். 1. ச. சோ.)

பண்பு: (1) பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்

(2) பண்பு என்பது குறிப்பின்றி நிகழும் குணம்.

(கலி. 133)

(தொல். பொருள். 276. பேரா.) பண்புடைமை: அஃதாவது பெருமை, சான்றாண்மைகளில் தாம் வழுவாது நின்றே எல்லார் இயல்புகளும் அறிந்து ஒத்து ஒழுகுதல். பண்பு எனப்படுவது பாடறிந்தொழுகல் (கலி. நெய். 16.) என்றார் பிறரும். (திருக். பண்புடைமை. பரி.)

பணிந்தமொழி: பணிவைப் புலப்படுத்திய மொழி.

(திருக். 419. பரி.)