இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
196
3
இளங்குமரனார் தமிழ் வளம் - 3
பற்று, ஆர்வம்: பற்று - பெற்றதன் மேல் நிகழும் ஆசை. ஆர்வம் - பெறாததன் மேல் நிகழும் ஆசை. (சீவக. 3039. நச்.)
பறவைப் பெயர்படு அத்தம்: பறவையினது பெயரைப் பெறு நெல்லு, என்றது இராசான்னம் என்னும் பெயர் பெறு கின்ற நெல் என்றவாறு. ஆகுதி பண்ணுதற்கு இந்த நெல்லுச் சோறே சிறந்தது. என்று இதனைக் கூறினார்.
(பெரும்பாண் . 305. நச்.)
பறி: மழையைத் தடுப்பதற்கு ஓலைப்பாயால் வளைத்து
இயற்றிய குடலை.
பறையலகு
மருவிற்று.
(அகம். 94. வேங்கட விளக்கு) பறையலகு க்காலத்துப் பலகறை என (சீவக. 2773. நச்.)
பன்றி: கோரைப்பல் இருப்பதனால் பல்+தி= பன்றி.
(சொல்லின் கதை 15.)
பனை: காயாப் பனையை ஆண்பனை என்றும், காய்ப்பன வற்றைப் பெண்பனை என்றும் வழங்குப.(தொல். பொருள். 58. பேரா.)