சொற்பொருள் நுண்மைவிளக்கம்
197
பா
பா: (1) பா என்பது, சேட்புலத்து இருந்த காலத்தும், ஒருவன் எழுத்தும் சொல்லும் தெரியாமல் பாடம் ஓதுங்கால் அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுள் என்று உணர்தற்கு ஏதுவாகிய பரந்து பட்டுச் செல்வதோர் ஓசை.
(தொல். பொருள். 313. பேரா.)
(2) அறம், பொருள், இன்பம், வீடு என இவற்றைப் பாவி நடத்தலின் ‘பா' என்பதூஉம் காரணக் குறி. (யா. வி.54)
-
(3) பா பரந்து பட்டுச் செல்வதோர் ஓசை என்பர் பேராசிரியர். பா என்ற சொற்குப் பரப்பு என்னும் பொருளைச் சிறுமியர் உடையாம் பாவாடையிலும் 'பால் மருள் மருப்பின் உரல் புரை பாவடி' என்ற சங்கத் தொடரிலும் பார்க்கலாம்.
(தொல்காப்பிய புதுமை. 77.)
பாக்கம்: பாக்கம் - கடற்பக்கத்து ஊர்.
(திருவிளை. வலைவீசின. 12. ந. மு. வே.)
பாக்கன்: பாக்கன் - காட்டுப் பூனை. படப்பை என்பது வேலி. படப்பையில் (காட்டுப்பூனை) காணப்பட்டது போலப் படப்பை சூழ்ந்த பாகத்தில் காணப்பட்டதால் பாக்கன் என்றும், கற்பிளப்பிலும் மரப்பொந்திலும் வாழ்வதால் விடருகம் என்றும் வழங்கப்பட்டதாகத் தெரிகின்றது. குறவர்கள் இன்றும் காட்டுப் பூனையைப் பாக்கன் என்றும் போக்கன் என்றும் கூப்பிடுகின்றனர். குழந்தையைப் பயமுறுத்தப் பாக்கன் வருவதாகக் கூறுவர்.
அவல்.
(சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம். 225.) பாசவல்: பாசவல்- நெல்லை வறாமல் இடித்துச் செய்த (குறுந்தொகை. 238. உ. வே. சா.)
பாட்டங்கால்: பாடுபட்டுப் பயிரிடுதற்கு உரியதாகலின், தோட்டக்கால் பாட்டங்கால் எனப்பட்டது.
(கலி. 111. உரைவிளக்கம். இளவழ.)