208
―
3 இளங்குமரனார் தமிழ் வளம்
புணர்வு: புணர்வு என்பது காமப்புணர்ச்சி முதலாயின. (தொல். பொருள். 259. பேரா.)
புய்த்தல்: புய்த்தல் - பறித்தல். “கோடு புய்க்கல்லாது உழக்கும் நாடகேள்" (38) எனக் கலித் தொகையில் இஃது இப்பொருளில் வருதல் கண்டு கொள்க. இச் சொல் இக் காலத்தில் பிய்த்தல் என வழங்குகின்றது. (திருவொற்றி முருகர். 217.)
ச்
புரவு: (புரவு-வரி) புரவு என்பது காப்பது என்ற பொருள் தரும். அது செய்பவனாகிய அரசனுக்குப் புரவலன் என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது. காக்கும் தொழிலை அரசனே அன்றி ஊர்ச் சபைகளும் தொழிற் சபைகளும் செய்யும். ஆகவே, அவ்விதம் காக்கும் செயலுக்காக ஒரு கடமை (வரி) ஏறப்டுத்தி இருப் பார்கள். அக் கடமைக்குப் புரவு என்று பெயர் ஏற்பட்டிருத்தல் வேண்டும். (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 12: 81-82.) புரவுவரி: அரசிறை நீங்கிய ஊர்களினின்றும் வருதற்குரிய பிறவரிகளுக்குக் கணக்கு வைத்திருப்பவன்.
(பாண்டியர் செப்பேடுகள். 182)
புரவுவரித் திணைக்களம்: புரவுவரித் திணைக்களம் என்பது நிலவரி சம்பந்த முடைய அதிகாரிகள் பலரை உறுப்பினராகக் கொண்ட நிலவரிக் கழகமாகும். இஃது ஒவ்வொரு மண்டலத் திற்கும் தனித் தனியாக அமைக்கப் பட்டிருந்தது.
(முதற் குலோத்துங்க சோழன். 85.)
புருவை: மறியாடு. இதனைச் சில விலங்குகளின் பெண் பாற் பெயரென்று நினைத்தற்கும் இடனுளது. தகர் - ஆட்டுக் கிடாய். (ஐங்குறு. 238. விளக்கம். பெருமழை.)
புரை: புரை என்பது, பருப் பொருள் அறிவினார்க்கு உண்மைபோல் மேல் தோன்றிச் சிறிது நுண்ணறிவுடையராய் உள்நோக்குவார்க்கும் அங்ஙனம் ஏதோர் உண்மையும் உடைய தன்றாய்ப் புரை படுதலாம்.
(திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை.99)
புல்லறிவாண்மை: அஃதாவது புல்லிதான அறிவை ஆளும் ஆட்சி.ஏதேனும் சிறிது அறிந்தது கொண்டு எல்லாம் அறிந் தானாகவும், எல்லாரினும் தான் பெரியன் ஆகவும் தன்னைத் தானே மதித்து வியந்து கூறலும் பிறர் பெருமைகளை அறியாது தான் இகழ்ந்து கூறலுமாம். (நாலடி. புல்லறிவாண்மை. பதுமனார்.)