சொற்பொருள் நுண்மைவிளக்கம்
207
Ч
புக்கில்: புக்குப் போகின்ற இல்லம். (திருக். 340. காலிங்) புகரி: புகரி - மான். புகர் - புள்ளி. அதனை உடையது புகரி.
"புகருழை ஒருத்தல்'
என வருதல் காண்க.
(அகம். 98(
(குறுந்தொகை. 391. உ. வே. சா.)
புகழ்: (1) புகழ் என்னுஞ் சொல், புகலுதலால் வந்தது. புகலுதல் என்றால் விரும்பிச் சொல்லுதல்; மனமார அவரவரே விரும்பிப் புகழும்படி அறச் செயல்கள் நிகழ வேண்டும். புகழ் பரப்புதற்கு இந்தச் சொல்லமைப்பு ஓர் அருமையான முறை மையை உட்கொண்டதாய் இருக்கிறது.(திருக்குறள் அறம். 141-142.)
(2) புகழ் என்பது தான் இறந்த காலத்தும் உளதாம் உரை.
(நாலடி. 9. பது ; விள. உ.)
புகா: புகா என்னுஞ் சொல்லின் பொருள் உணவு என்பது. புகர்வு என்பதும் புகவு என்பதும் புகா என்னும் சொல்லின் திரிபு, புகா என்பதே சரியான சொல். இந்தச் சொல் பிற்காலத்தில் தமிழ் இலக்கியங்களில் வழங்கப்படவில்லை ஆயினும், பேச்சு வழக்கில் இன்றும் வழங்கி வருகிறது. ஆனால் இச்சொல் இப்போது குழந்தைகளின் உணவுக்கு மட்டும் பெயராக வழங்கப் படுகிறது. குழந்தைகளைப் பார்த்து ‘நீ புவ்வா சாப்பிட்டாயா?' என்றும் ‘புவ்வா சாப்பிடு' என்றும் கூறுவதை இன்னும் பேச்சு வழக்கில் கேட்டு வருகிறோம். புவ்வா என்பது புகா என்பதன் திரிபு என்பது நன்கு தெரிகிறது.
தமிழில் வழங்குவது போலவே கன்னட மொழியிலும் புவ்வா (buvva) என்னும் சொல் குழந்தைகளின் பேச்சில் உணவு என்னும் பொருளில் வழங்கி வருகிறது. தெலுங்கு மொழியிலும் புவ்வா என்னுஞ் சொல் சோற்றுக்கும் உணவுக்கும் பெயராக வழங்கப்படுகிறது. (அஞ்சிறைத் தும்பி. 129.)
புகாக்காலை:
'புகா' உணவு (புகாக்காலை
-
உண்டிக் காலம்) உண்ணு நேரத்தில் எவரும் புகாராகலானும் அது ‘புகாக் காலை' ஆயிற்று. (கலி. 51. உரை விளக்கம். இளவழ.)