சொற்பொருள் நுண்மைவிளக்கம்
225
கூறப்படும். நீலச் சேலையைக் கருப்புச் சேலை என்பது உலக வழக்கு. சற்றுப் பசிய வெண்ணிறக் காளையை மயிலை என்பர் உழவர். மயில் என்னும் தமிழ்ச் சொல்லே மயூர என்று வட சொல்லில் வழங்குகின்ற தென்க. (ஒப்பியன் மொழிநூல். 309.)
மரபு: (1) மரபு என்பது, காலமும் இடனும் பற்றி வழக்குத் திரிந்தக் காலும் திரிந்தவற்றுக்கு ஏற்ப வழுப்படாமைச் செய்வ தோர் முறைமை. (தொல். பொருள் 313. பேரா.) (2) மரம் - மரபு. அடியுங் கவையுங் கிளையும் உடைய மரம் ய போலக் கிளைத்துத் தொடர்ந்து வருதலின் குலவழி மரபெனப் பட்டது. (ஒப்பியன் மொழிநூல். 249.)
மருதம்: (1) பழைய காலத்தில் நெற்பயிரிடுதற்கேற்றவை களாகத் திருத்தப்பட்ட நிலங்கள், மருத மரங்களின் அருகே இருந்தமையாற் போலும் அவற்றிற்கு மருதநிலம் என அவர் பெயர் அமைத்தனர். (சிறுவர்க்கான செந்தமிழ். 63.)
=
(2) மருவுவது மருதமாகும். மருவுதல் என்பது கலத்தல், கிட்டுதல், தழுவுதல் எனும் பொருட்டது. இப்பொருளை நடைமுறைச் சொற்களாலும் அறியலாம். மருமகன். வீட்டில் புதிதாக வந்து கலந்த மகன். பத்துப்பாட்டிலே இப்பொருள் பட்டு நிற்கும் சொற்களைக் காண்போம். மருவரல் = சேர்தல். மருவல் = கிட்டுதல். மருவழி மருவின இடம். மருவூட்டுதல் மருவுதலை உணர்த்துதல். மருவலர் = தம்மைத் தழுவாதவர், அஃதாவது பகைவர்; எனவே இச்சொற்களின் மூலவேர்ச் சொல் 'மரு' என்பதே. மரு+து+அம்= மருதம் “மருதம் சான்ற மருதத் தண்பணை” என்ற மதுரைக் காஞ்சி வரியிலே மருதம் என்பது ஊடியும் கூடியும் போகம் நுகர்தல் என்று நச்சினார்க்கினியர் எடுத்துக் காட்டுவதும் இங்குக் காணற்குரியது.
ஊடல் என்பது பிரிவும் அன்று; புணர்தலும் அன்று; பிரிவுக்கும் புணர்வுக்கும் இடைப்பட்டநிலை. தலைவியின் அன்பைப் பெற அவளைக் கிட்டுகின்ற (மருவுகின்ற) நிலை. அவளது பிணக்கைத் தவிர்க்க அவளண்டை மருவி (சார்ந்து) நிற்கும் நிலையே மருதம். (அகத்திணைத் தெளிவு.)
=
மருந்து: (1) மரு மருந்து =
தழை. மருந்துச் சரக்கு.
நோயை நீக்கும் வாசனைத் (புறநானூற்றுச் சொற்பொழிவுகள். 357.)
(2) உடம்பு நொந்துபோகும்படி செய்யும் நோயை வராமல் மறுப்பதுதான் மருந்து. நோயினால் உடம்பு கெட நாற்றத்தை