உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

இளங்குமரனார் தமிழ் வளம் - 3

3

அடையும். அக்கெடு நாற்றத்தை மறுத்து மருவினை (மரு- மணம்) அஃதாவது உடம்புக்கு இயற்கையாக உள்ள மணத் தினைப் பெறும்படி அருள்வது மருந்து எனப் பெற்றது. வந்த நோயை மறுத்து, வரும் நோயினையும் மறுத்து, இயல்பாக வந்து சேரும் சாவினையும் மறுத்து நிலையான இன்பத்தை அருள்வதே மருந்து என்று திருமூலநாயனார் திருவாய் மலர்ந் தருள்கின்றார். (பதினெண்கீழ்க் கணக்குச் சொற்பொழிவுகள். 213.) மருள்: மருள் என்பது அறிவு இன்றியே மயங்கி இருக்கும் (புறம். 28. ப. உ)

அது.

மலங்கு: மலங்கு என்பது விலாங்கு என்னும் மீன்.

(நாலடி. 375. விள. உ.)

மலிதல்: மலிதல் என்பது இல்லொழுக்கமும் புணர்ச்சியும் முதலாயவற்றான் மகிழ்தல். (தொல். பொருள். 499. பேரா.)

ஓங்கல்’

மலை: 'மலை' என்னும் சொல்லுக்குப் பொருள் வலிமை யினை உடையது. மல் என்றால் வலிமை. மலைகள் எல்லாம் பெரும்பாலும் வலிவான கருங்கற்களால் ஆக்கப்பட்டிருக் கின்றன. மிகவும் உயரமாக இருக்கும் மலையை ‘பிறங்கல்' ‘பொருப்பு' வெற்பு' என்றும்; ஓரிடத்தில் குறுக்கே வளர்ந்து நீண்டு கிடக்கும் மலையை ‘விலங்கல்' என்றும்; ஒன்றன்மேல் ஒன்று அடுக்கு அடுக்காய் வளர்ந்திருக்கும் மலையை ‘அடுக்கல்’ என்றும்; எதிரொலி செய்யும் மலையைச் 'சிலம்பு' என்றும்; மூங்கிற் காடுகள் உள்ள மலையை ‘வரை’ என்றும்; காடுகள் அடர்ந்த மலையை ‘இறும்பு' என்றும்; சிறிய மலையைக் ‘குன்று,’ ‘குவடு' 'குறும்பொறை' என்றும்; மண் மிகுந்த மலையைப் ‘பொற்றை,’ ‘பொச்சை’ என்றும் மலைப் பக்கத்தைச் ‘சாரல்’ என்றும் பழைய தமிழ் நூல்கள் கூறா நிற்கும். (சிறுவர்க்கான செந்தமிழ். 4.)

மலைபடுகடாம் : மலைக்கு யானையை உவமித்து அதன் கட் பிறந்த ஓசையைக் கடாமெனச் சிறப்பித்த அதனால், இப் பாட்டிற்கு மலைபடுகடாம் என்று பெயர் கூறினார்.

(பத்து. மலைபடுகடாம்: நச்.)

மலையாளம்: இடைக்காலத்தே தோன்றிய கல்வெட்டுக்கள் பலவும் சேரநாட்டை மலை நாடு எனவும் மலைமண்டலம் எனவும் குறிக்கின்றன. அது வழியே நோக்கின் மலைநாடு, மலைவள நாடு எனவும் மலைப்பால் நாடு எனவும் கூறப்படும்