உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

3

இளங்குமரனார் தமிழ் வளம் – 3

வண்ணகம்: வண்ணித்துப் புகழ்தலின் வண்ணகம் எனப் படும். என்னை? தரவினானே தெய்வத்தினை முன்னிலையாகத் தந்து நிறீஇப் பின்னர் அத்தெய்வத்தினைத் தாழிசையானே வண்ணித்துப் புகழ்தலின் அப்பெயர் பெற்றதாகலின்.

(தொல். பொருள். 452. பேரா.)

(தொல். பொருள். 524. பேரா.)

வண்ணம்: (1) வண்ணம் என்பது சந்த வேறுபாடு.

(2) வண்ணம் என்பது, ஒருபாவின் கண்ணே நிகழும் ஓசை விகற்பம். (தொல். பொருள். 313. பேரா.)

வணிகர்: இப்பர், கவிப்பர், பெருங்குடியர் மூன்று பாலார். (சீவக. 1756. நச்.)

வதுவைமணம்: வரைவு என்பது இன்னானுக்கு இன்னவள் உரியவள் என்று பெற்றோரும் சான்றோரும் கூடிப் பலரும் அறிய உறுதி செய்வது. அதன் பின்னரே கடிமணம் நடை பெறும். அதனைப் பழந்தமிழ் நூல்கள் வதுவைமணம் குறிக்கின்றன.

என்று

(சேரமன்னர் வரலாறு. 329)

வம்பு: காலம் அல்லாத காலத்து மழை.

(திருக்கோ. 159. பேரா.)

வயவர்: வலிமைப் பொருட்டாய உரிச்சொல் அடியாகப் பிறந்த பெயர். எனவே, இவர் தமது வலியாற் பல போர்களைச் செய்து வெற்றிபெற்ற வீறுடையராதல் பெற்றாம்.

(பதிற்றுப்பத்து. 12. ஔவை. சு. து.)

வயவு: சூல் முதிர்ந்த விடத்தும் ஈன்ற விடத்தும் உணவு முதலிய பற்றியுண்டாம் ஆசைப் பெருக்கம்

(அகம் 238. வேங்கட விளக்கு..)

வயா: வேட்கைப் பெருக்கம், பெரும்பாலும், இது கருவுற்ற காலத்து உயிரினம் எய்தும் வேட்கை மேற்று. “வீழ்பிடிக் குற்ற கடுஞ்சூல் வயா” (கலி 40) என்பதனாலும் அறியப்படும்.

(ஐங்குறு. 51. ஔவை. சு. து.)

வர்ணம்: (சாதி) நிற வேறுபாடு பற்றி வந்தமையினா லேயே முதன் முதற் சாதியானது ‘வர்ணம்’ என்னும் பெயரால்

வழங்கப்பட்டது.

(சாதி வேற்றுமையும் போலிச் சைவரும். 41)