உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முறை.

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

253

வரலாறு: வருதல் வழி: தொன்றுதொட்டு வழங்கி வந்த (தொல். சொல். 389. சி. கணேச) வரிப்புத்தகர்: வரிப்புத்தகர் என்போர் அரசனுக்கு ஒவ் வோர் ஊரினின்றும் வருதற்குரியனவும் நீக்கப்பட்டனவும் ஆகிய அரசிறைக்குக் கணக்கு வைப்போர்.

(முதற் குலோத்துங்க சோழன். 85.)

வருத்தம்: வருத்தம் எனினும் முயற்சி எனினும் ஒக்கும்.

(தொல். பொருள். 254. பேரா.)

வரை: வரை என்பது பெருமலையை. (பதிற்று. 74. ப. உ.) வரைதல்: வரைதல் என்பது காப்பன காத்துக் கடிவன கடிந்து ஒழுகும் ஒழுக்கம். (தொல். பொருள். 260. பேரா.)

வரையாது கொடுத்தல்: தனக்கென ஒன்றும் வரைந்து (சிறுபாண். 217. நச்.)

வையாமல் கொடுத்தல்.

வரைவு: வரைவு என்பது தலைமகள் தலைமகனுக்கே உரியவள் எனச் சான்றோரும் தமரும் அறிய வரையறை செய்தல்.

(ஐங்குறு - பதிப்புரை. பக் 14. ஔவை. சு. து.)

வல்லெழுத்து: ஒழிந்த மெல்லெழுத்தையும் இடை யெழுத்தையும் நோக்கித் தாம் வல்லென்று இசைத்தலானும், வல்லெனத் தலைவளியால் பிறத்தலானும் வல்லெழுத்து ஆயிற்று. (தொல். எழுத்து. 19. நச்.)

வலன் ஏர்பு: வலன் ஏர்பு என்பதற்கு ‘வலமாக எழுந்து என்று பொருள் கொண்டார் நச்சினார்க்கினியர். இதற்கு வன்மை எழுந்து' அல்லது ‘வலிமை ஏறி' அல்லது 'வன்மை உற்று' எனப் பொருள் கொள்ளலும் கூடும். பத்துப்பாட்டில் பல விடங்களில் ‘வலன் ஏர்பு' என்ற தொடர் ஆளப்பட்டுள்ளது. வலமாக எழுந்து' என்ற பொருளை நச்சினார்க்கினியர் அவ் விடங்களில் எல்லாம் ஒரேவிதமாகப் பொருத்திக் காட்டினார் இலர். திருமுகாற்றுப்படையில் ‘மகாமேரு மலையை வலமாகத் திரிதரும்,' என்று கொண்டார். 'அங்கு எழுந்தது, ஞாயிறு. இங்கு எழுந்ததோ (வலனேர்பு பொழிந்தென.” நெடுநல்வாடை) மேகம். து மேருமலையை வலமாய் எழுந்தது என்பது பொருந்த வில்லை. தான் கிடந்த மலையை வலமாக வளைந்து எழுந்து என்று கொண்டார். மலையில் இருந்தோ மேகங்கள் எழுவன? எழுவனவே எனினும் ஏன் அம்மலையை வலமாக வளைந்து