உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

இளங்குமரனார் தமிழ் வளம் – 3

எழவேண்டும்? பட்டினப்பாலை அடி 67- இல் “நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு கோள்மீன் விராய நாள்மீன்" என்ற விடத்து மேருவும் பொருந்தவில்லை, கிடந்த தலையும் பொருந்தவில்லை. ஆகாயத்தே வலமாக எழுந்து எனக் கொண்டார். முல்லைப் பாட்டு அடி 91இல் "வலனேர்பு வயிரும் வளையும் ஆர்ப்ப என்ற இடத்து மகாமேருவோ, மலையோ, ஆகாயமோ ஒன்றும் பொருந்தவில்லை. வலன் = வெற்றி எனக் கொண்டார். இவ் வெல்லா இடங்களிலும் அல்லது மேகங்களைக் குறிக்கும் இடங்களிலேனும் ம் வலன்’ வ என்பதற்கு வன்மை என்று

கொள்ளத் தகும்.

வலனேர்பு வலன் + ஏர்பு.

(அல்லது)

வலன் + நேர்பு எனப் பிரிக்கத்தகும்.

வலன் = வலம், வன்மை, வலிமை. ஏர்பு = எழுந்து, ஏறி. நேர்பு = நேர்ந்து, உற்று. (நெடுநல்வாடை, பாநலன். 25-26.)

வவ்வுதல்: வாய்ப்பற்றுதல் போல் கைப்பற்றுதல், பறித்தல்.

(முதல் தாய்மொழி. 13.)

வழக்கு: (1) உலகத்தார் அடிப்படச் செய்து போந்த செயல்.

(திருக். 795. பரி.)

(2) வழக்கு என்பது காரணமின்றி வழங்கற்பாடே பற்றி வருவது பண்புகொள் பெயராயினும், பண்பு குறியாது சாதிப் பெயராய் வெள்யாடு, வெண்களமர், கருங்களமர் என வரு வனவும், குடத்துள்ளும் பிறகலத்துள்ளும் இருந்த நீரைச் சிறிது என்னாது சில வென்றலும், அடுப்பின் கீழ்ப்புடையை மீயடுப் பென்றலும் பிறவும் வழக்காறாம். (தொல். சொல். 17. சேனா.)

(3) வழக்காவது சில சொற் பிறந்த அக்காலத்து இஃது அறத்தை உணர்த்திற்று, இது பொருளை உணர்த்திற்று. இஃது இன்பத்தை உணர்த்திற்று, இது வீட்டை உணர்த்திற்று என்று உணர்விப்பது. (தொல். சிறப்புப் பாயிரம். நச்.)

வழிநூல்: வழிநூல் எனப்படுவது நான்கு வகையாற் செய்யப் படும். தொகுத்தல் என்பது, முதல் நூலுள் விரிந்ததனைச் சில் வாழ்நாள் சிற்றறிவின் மாக்கட்கு அறியத் தொகுத்துக் கூறுதல்;

விரித்தல் என்பது, முதல் நூலில் தொகுத்துக் கூறப்பட்டு விளங்காது நின்றதனை விளங்கும் ஆற்றான் விரித்துக் கூறல்;