262
இளங்குமரனார் தமிழ் வளம் – 3
வெ
வெஃகுதல்: வெஃகுதலாவது விரும்புதல். விருப்பத் திற்குப் பிறிதொரு பெயராகிய காமம் என்பது தனது பொதுப் பொருளின் நீங்கி மகளிர்பால் இணைவிழைச்சுக் கருதிச் செல் லும் விருப்பத்தைக் குறித்தல் வழக்காயினாற்போல, இவ் வெஃகலும் பிறர் பொருளை வௌவச்செல்லும் விருப்பத்தைக் குறித்தல் வழக்காயிற்று. இதற்கு முதனிைைல வெஃகு என்னும் குகர ஈற்றுச்சொல். இஃது எதிர்மறை ஆகாரமும், பண்பிறுதி மையும் பெற்று வெஃகாமை என எதிர்மறைப் பண்புப்பெயர் ஆயிற்று. (திருக்குறள். தண்ட. அதி. 18)
வெண்சாந்து: வெண்சாந்து பச்சைக்கருப்பூரமும் பனி நீரும் முதலான நறுமணப் பொருள்களாலான கலவை.
(திருவொற்றி முருகர் மும்மணிக்கோவை. 118)
வெண்பா: வேற்று வண்ணம் விரவாது தூய்மை பெற்ற வெள்ளை வண்ணம் எல்லா வண்ணத்துள்ளும் சிறப்புடைத்து. அவ்வாறே வேற்றுத்தளையும் அடியும் விரவாது தூய்மை பெற்று எல்லாப் பாவினுள்ளும் சிறப்புடைத்து ஆகலின் 'வெள்ளை' என்பது காரணக்குறி; திருவேபோலச் சிறப்புடை யாளைத் திரு என்றாற்போலக் கொள்க. (யா. வி. 55.)
வெண்மை: வெண்மையாவது அறிவு முதிராமை.
(திருக். 841. பரி.)
வெப்பு: தொழுநோய்; இது வெதுப்பு எனினும் அமையும். (சிலப்; உரைபெறு கட்டுரை. 1. அடியார்.) வெய்யவன்: சூரியன்; இதற்கு வெப்பத்தை உடையவன் என்பது பொருள். (தண்டி. 57. சுப். தே.)
வெருகு: வெருகு என்ற பெயரே காட்டுப்பூனையின் வெருள் நோக்கினால் தோன்றிற்று என்பது தெளிவாகின்றது. இஃது இளம்பூரணரின் தொல்காப்பிய உரையில் இருந்து விளங்குகின்றது. வெரூஉதல் என்ற மெய்ப்பாட்டை விளக்க வந்த