உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

அமிழ்து : (1) அமிழ்து என்றது நீர்.

27

(பதிற்று. 17. ப. உ.)

(2) அமிழ்து என்றார் கழிபெருஞ் சுவையோடு உறுதி பயத்தல் உடை மையான். (திருக்கோ. 5. பேரா.)

-

(3) அவிழ் - அவிழ்து - அவிழ்து - அமுது = சோறு. மருமம் மம்மம் - அம்மம் - அம்முது அமுது = பால். பாலைக் குறிக்கும் அமுது என்னும் சொல்லும் சோற்றைக் குறிக்கும் அமுது என்னும் சொல்லொடு மயங்கி அமிழ்து என்னும் வடிவங் கொள்ளும். (திருக்குறள் மரபுரை. உரையெச்சம். 64)

அமை : அமை என்பது மூங்கிலின் மறு பெயராயினும் அதனுள் ஒரு சாதி என்று அறியப்படுகிறது. 'அமையொடு வேய்கலாம் வெற்ப' என்று பழமொழி நானூறு பேசுகிறது. அதன் பழைய உரை அமை என்பது முள்ளில்லா மூங்கில்' என்று அறிவிக்கிறது.

(திருக்குறள் அழகும் அமைப்பும். 97.)

அமைச்சன் : அமை - அமைச்சு - அமைச்சன் = அரசியல் வினைகளைச் சூழ்ந்து அமைப்பவன்.

அமை+சு=அமைச்சு. ஒ.நோ: விழை விழைச்சு.

-

-

(வடமொழி வரலாறு. 75.)

அயிரை : அயிர் நுண் மணல். அயிரை நீர்க்குள் அடி மட்டத்திலுள்ள மணலின் அல்லது சேற்றின் மேலேயே ஊர்ந்து திரியும் ஒரு வகை மீன். அது ஆற்றில் அல்லது குளத்தில்தான் இருக்கும். (ஒப்பியன் மொழி நூல். 40.)

அரண் : அரணாவது, மலையும் காடும் நீரும் அல்லாத அகநாட்டுள் செய்த அருமதில். அது வஞ்சனை பலவும் வாய்த்துத் தோட்டிமுள் முதலியன பதித்த காவற்காடு புறஞ் சூழ்ந்து இடங்கர் முதலியன உள்ளுடைத்தாகிய கிடங்கு புறஞ் சூழ்ந்து யவனர் இயற்றிய பல பொறிகளும் ஏனைய பொறிகளும் பதணமும் ஏப்புழை ஞாயிலும் ஏனைய பிறவும் அமைந்து எழுவும் சீப்பும் முதலியவற்றால் வழுவின்று அமைந்த வாயிற் கோபுரமும் பிற எந்திரங்களும் பொருந்த இயற்றப்பட்டதாம்.

(தொல். புறத். 65. நச்.)

அரமங்கையர் : தேவப் பெண்களுக்குப் பொதுப்பெயர்.

(திருக்கோ. 371. பேரா.)