உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

இளங்குமரனார் தமிழ் வளம் – 3 3

அரவணைத்தல் : பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து தழுவும் தொழிலில் சிறந்தவை. இதனால் முதலாவது ஒருவரை ஒருவர் உடலால் கட்டித் தழுவுவதையும் பின்னர் உள்ளத்தால் ஒன்றித் தழுவுவதையும் அன்பாகப் பேணிக் காத்தலையும் குறிக்க அரவணைத்தல் என்னும் வழக்கு எழுந்தது. அரவு - பாம்பு, அணைத்தல், தழுவுதல். 'மாசுண மகிழ்ச்சி' என்றார் திருத்தக்க தேவரும்.

(மாசுணம் பாம்பு)

(சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள். 6.)

அரற்று : அரற்று என்பது அழுகை அன்றிப் பலவும் சொல்லித் தன் குறை கூறுதல். அது ‘காடுகெழு செல்விக்குப் பேய் கூறும் அல்லல் போல' வழக்கினுள்ளோர் கூறுவன.

(தொல். பொருள். 260. பேரா.)

அரன் : (1) ‘அரன்’ தீவினைகளை அரிப்பவன். இச்சொல் தமிழ் வடமொழி இரண்டற்கும் பொது.

(திருவாசக விரிவுரை. மறைமலை. 92.)

(2) அரன் என்னும் பெயர் அடியார் வினைகளை அரித்தல் அல்லது அராவுதல் பற்றி வந்தது. தமிழில் இருந்து மொழிக்கட்சென்ற சொற்களுள் இதுவும் ஒன்று.

(திருவாசக விரிவுரை. மறைமலை. 390.)

அராகம் : (1) அராகம் என்பது அறாது கடுகிச் சேறல்; பிறிதொன்று பெய்து ஆற்ற வேண்டுந்துணைச் செய்வதாகிய பொன்னினை அராகித்தது என்ப ஆகலின் அதுவும் ஒப்பின் ஆகிய பெயராயிற்று. என்னை? மாத்திரை நீண்டும் துணிந்தும் வாராது குற்றெழுத்துப் பயின்று வந்து நடைபெறுதலின்.

(தொல். பொருள். 464. பேரா.)

(2) ‘அர்’ என்னும் ஒலிக்குறிப்பினின்றும் பிறந்து இசையைக் குறிக்கும் சொல். அரங்கன் என்பது ரங்கன் இரங்கன் என்று வழங்கினாற் போல அராகம் என்பதும் ராகம், இராகம் என வழங்குகின்ற தென்க. (ஒப்பியன் மொழிநூல். 110.)

அரி : (கள்) பன்னாடையால் அரிக்கப்பட்டது.

(அகம். 157. வேங்கட விளக்கு.)

அரிசி : பண்டைத் தமிழ் நாட்டினின்றும் அரிசியை ஏற்று மதி செய்த கிரேக்கர்கள் அதனை ‘அருஸா' என்றார்கள். அதுவே ஆங்கிலத்தில் ரயிஸ் (rice) என்று ஆயிற்று. அரிசி என்னும்