36
இளங்குமரனார் தமிழ் வளம் – 3
(6) அறம் ‘அறு' என்னும் முதனிலையிற்றோன்றி அறி யாமையினையும் அது காரணமாகச் செய்யும் தீவினையினையும் அறுப்பதென்னும் பொருட்டாம். (திருவாசக விரிவுரை. 78).
அறல் : (1) அறல் - அற்று விழுகின்ற நீர்.
(அகம். 19. வேங்கடவிளக்கு.)
(2) நீர் வற்றிய காலத்து மணல் அற்று அற்று இருப்பது. (அகம். 25. வேங்கடவிளக்கு)
மணல்.
(3) ஆற்றில் நீர் அற்றற்றுச் செல்லும் இடத்துள்ள கரு (புறம். 25. குறிப்புரை.)
(4) அறு + அல் = அறல் = கருமணல், சிறுதூறு, நீர், விழவு முதலிய பலபொருளுந் தருவதும், ஒருங்கு சேர்ந்து கருங் கட்டியாயிருந்தது, அற்று வேறுபட்டுத் தனித்தனியாகிப் பிரிந்து நின்று கருமணலாயிற்று; தரையினுள்ளிட்ட விரையானது தன்மீதுள மண்ணையறுத்துக்கொண்டு வெளிக்கிளம்புதலிற் சிறு தூறாயிற்று. கிணறு முதலியன வெட்டிய வழிப் பக்கங்களி னின்றும் அடியினின்றும் மண்ணையும் பாறையையும் அறுத்துக் கரைத்துக்கொண்டு வெளிப்படுதலின் நீராயிற்று; கடவுட்பூசை முதலிய காலங்களில் மக்களாவார் செயலற்று ஒரு மனத்தின ராகியிருத்தலின் விழவாயிற்று. (தமிழ் வியாசங்கள். 52)
அறவு: அறு+அ+வ்+உ: அறவு = அறுபட்ட இடம், ஒடிவு, கடவை, புல் முதலியன அறுபடுதலின் அங்ஙனம் அறுபட்ட இடத்தையும், அறுதல் ஒடிதலுமாதலின் ஒடிவையும் வேலி நாற்புறமும் வேய்ந்துழி அதனுள்ளிருப்பான் வெளிச்சேறற்கு அவ்வேலியுட் சிறிது அறுத்து வாயில் செய்து கோடலிற் (தமிழ் வியாசங்கள். 53.)
கடவையையுமுணர்த்திற்று.
அறவை: அறு+அ+வ்+ஐ: அறவை= அநாதி உறவற்றவன் ஆதலின் இப்பொருள் தருவதாயிற்று. (தமிழ் வியாசங்கள். 53.) அறன் கடை: (பாவம்) அறத்தின் நீக்கப் பட்டமையின் பாவம் ஆயிற்று என்பது பரிமேலழகர் உரை. (குறள். 142)
(அகம். 155. வேங்கட விளக்கு)
அறிவு: (1) அறிவு என்னோ எனின், “எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.’
(குறள். 355)