சொற்பொருள் நுண்மைவிளக்கம்
37
என்றார் ஆகலின் எப்பொருள் ஆயினும் அப்பொருட்கண் நின்று அம்மெய்ம்மையை உணர்வது அறிவு. (இறையனார். 2. நக்.) (2) அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்.
(கலி 133)
அறு: (1) அறு என்னும் பகுதியினடியாக, அறம், அறல், அறவு, அறவை, அறுதல், அறுதி, அறுத்தல், அறுப்பு, அறும்பு, அறுகால் அல்லது அறுதாள், அறுவை, அறை, அற்றம், அற்றை, ஆறு, முதலிய, பலசொற்கள் பிறக்கின்றன.
(தமிழ் வியாசங்கள். 52.)
(2) குறு என்பதில் இருந்து குறிது குறியன் என்றும், சிறு என்பதில் இருந்து சிறியர் என்றும் சொற்கள் தோன்றுமாறு அறு என்பதில் இருந்து அறிதல் பிறந்தது எனக் கொள்க.... அறு என்ற முன்னிலை அறி என்று நின்றபின், அறிவு, அறிகை, அறிக்கை, அறிவிப்பு, அறிஞர் என்ற பல பெயர்கள் அதனி னின்றும் தோன்றின. (செந்தமிழ்ச் செல்வி. 2:141.)
ல
அறுகால்: அறு+ கால்: அறுகால். அறு+தாள்; அறுதாள் - பாம்பு. அற்ற கால்களையுடையது. அஃதாவது, கால்கள் அற்றது ஆதலிற் பாம்பாயிற்று; வினைத்தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை. (தமிழ் வியாசங்கள். 54) அறுகோட்டிரலை: அறுப்பறுப்பான கொம்புள்ள கலை (பட்டினப். ஆரா. 94.)
மான்.
அறுதல்: கைம்பெண், மங்கலியமிழந்தார் தாலியறுபடுதல் இயல்பாமாதலின் இச்சொல் தொழிலாகு பெயராய்க் கைம் பெண்ணையுணர்த்துவதாயிற்று. இஃது இகர விகுதி பெற்று ‘அறுதலி’ யென நிற்றலுமுண்டு. இவ்வாறாகவுஞ் சிலர் இதனை அறுதாலி' யென்றதன் குறுக்கலாகக் கூறுவாராயினார்.
(தமிழ்வியா. 53.)
அறுதி: இல்லாமை, சாவு, சொந்தம், முடிவு, முடிந்த விலை, லைச்சீட்டு முதலிய பலபொருளையுந் தாராநின்றது. இது பொருளறுதலில் இல்லாமையும், உயிரறுதலிற் சாவும், பிறருக்கு உரிமையறுதலிற் சொந்தமும், அறும் நிலையாதலின் முடிவும், மேற்பேச்சற்றுத் தீர்ந்த விலையாதலின் முடிந்த விலை யும், ஒருவனுக்குரித்தாய பொருள் விற்கப் பெற்றமையின் அவனது உரிமையற்று வாங்கினானிடஞ் சேர்தலின் அங்ஙனம்
ய