உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

இளங்குமரனார் தமிழ் வளம் – 3 3

கண்ணீர் விழுமாதலின் அவ் அருளானே அன்புடைமை விளங்கும் என்பது. (தொல். பொருள். 260. பேரா.)

(5) தொடர்பு பற்றிச் செல்லும் அன்பு. (6) ஒருவரை ஒருவர் இன்றியமையாமை.

(திருக். 757.பரி.)

(அகம். 94. வேங்கடவிளக்கு)

(7) அன்பு என்பதற்கு அன்று என்பது சொற்பொருள். தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தமக்கல்ல;

(அன்பு - அருள்)

தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டே என்பது (திருக்குறள். அறம். 66.)

கருத்து. (8) அன்று என்னும் அன்பு தமக்கன்று என்னும் கருத்தில் நிகழ்தலாகிய ஒருவகை நெகிழ்ச்சிப் பண்பு.

அன்பு

அருள்:

L

(திருக்குறள் அறம். 96)

(1) அன்பு காதலில் இருந்தே பிறப்பது அருளாக மலர்வது. பற்று நேசம் ஆகிய பண்புகளாக விரிவது. ஆனால் அஃது அருளுக்கே மிகவும் அணிமையுடையது அதற்குக் கிட்டத்தட்ட ஒப்புடையது. ஏனெனில் காதலும், பற்றும், பாசமும், நேசமும், ஏதேனும் ஒரு ஏதுவைப் பற்றுக் கோடாகக் கொண்டே நிகழ் பவை. அன்போ, அருள்போல ஏதுவும் பற்றுக்கோடும் இன்றி யாவர் மாட்டும் செல்வது. அருளுக்கும் இதற்கும் உள்ள ஒரே வேற்றுமை-அருள் இனத்தினின்று சமுதாயம், சமுதாயத்தில் இருந்து குடும்பம் என அகம் நோக்கிய பண்பு. ஆனால் அன்பு குடும்பத்தில் இருந்து சமுதாயம், சமுதாயத்தில் இருந்து இனம் எனப் புறம் நோக்கியபண்பு அருள் இன வாழ்வில் செயலாற்றும் அன்பு சமுதாய வாழ்வில் செயலாற்றும்.

(திருக்குறள். மணிவிளக்கவுரை II.591) (2) “தொடர்புபற்றாதே வருத்தமுற்றார் மேற்செல்வதாய தொடர்புபற்றிச் செல்லும் அன்பு முதிர்ந்துழி

அருள்,

உளதாவது.

அன்புடைமை: அன்புடைமையாவது தன்னைச் சார்ந்தார் மாட்டுக் காதல் உடையவன் ஆதல். (திருக். அன்புடைமை. மணக்)