ஆ
ஆ: ஆ, என்பது பெற்றத்தினை உணர்த்தும்வழிப் பெயர்ச் சொல் எனவும், இரக்கக் குறிப்பினை உணர்த்தும்வழி இடைச் சொல் எனவும் ஏவற் பொருண்மையை உணர்த்தும்வழி வினைச் சொல் எனவும், ஆதற் புடை பெயர்ச்சியை உணர்த்தும் வழி உரிச்சொல் எனவும் கோடல் எல்லார்க்கும் ஒப்ப முடிந்தமை யின் எழுத்தொப்புமை பற்றி உபசாரத்தால் பல பொருள் ஒரு சொல் எனப்படினும் உண்மையான் வேறுவேறு சொல்லே யாம் புணர்ச்சிக்கட் பெற்றத்தினை உணர்த்தும்வழி ஆன் கோடெனச் சாரியை பெறுதலும், மரவிசேடத்தை உணர்த்தும் வழி ஆங்கோடென மெல்லெழுத்துப் பெறுதலும் ஆகிய செய்கை வேறுபாடுஞ் சொல்வேறுபாட்டானன்றிப் பெறப் படாமையின் அவை வேறுவேறு சொல்லென்பது பெற்றாம்.
.....
(சிவஞானபாடியம். 2:4)
ஆக்கம்: (1) ஆக்கம் தருவதனை ஆக்கம் என்றார். ஆக்கம் மேல்மேல் உயர்தல். (திருக்குறள். 31. பரிமே.)
(2) ஆக்கம் -செல்வம். ஆக்கப்படுவதும் ஆக்குவதும் ஆகலின். மேல்மேல் உயர்தல் என்றார் பரிமேலழகர்.
ஆசிரியப்பா:
(திருக்குறள். 31. பரிமே.)
சீரினானும் பொருளினானும்
ஓசை
யினானும் ஆகிய நுண்மையைத் தன்கண் நிறுவிற்று ஆகலா னும், புற நிலை வாழ்த்து முதலாகிய பொருள்களை ஆசிரியனே போல நின்று அறிவிக்கும் ஆகலானும் 'ஆசிரியம்' என்பதும் காரணக் குறி. ஆசு எனினும் சிறிது எனினும் நுண்ணிது எனினும் ஒக்கும்.
கோடானவர்.
உளர்.
(யா. வி. 55.)
சிரியர்: ஆசு - பற்றுக்கோடு. மாணாக்கர்க்குப் பற்றுக் (வடசொற்றமிழ் அகரவரிசை. 306. ஆசினி: ஆசினி என்பது ஒரு மரம்; ஈரப்பலா என்பாரும் (புறம் 158. ப. 2)