சொற்பொருள் நுண்மைவிளக்கம்
45
ஆலாலம் என்னும் பெயர்கள் ஆல் (நீர்) என்னும் சொல்லடி யாகப் பிறந்த சொற்கள் என்பதில் ஐயமில்லை.
(அஞ்சிறைத் தும்பி. 119, 124)
ஆலவட்டம்: தாலவட்டம் - ஆலவட்டம் = விசிறி. தாலம்- பனை. பனைமட்டையால் ஆய வட்டமாயதோர் கருவி.
(மொழிநூல். கார்த்தி இலக்கணவியல். 122)
ஆலவாய் : ஆலவாய் என்பது மதுரையின் பழைய பெயர். ஆலவாயில் (மதுரையில்) கோயில் கொண்ட வராகிய சிவ பெருமானுக்கு ஆலவாய் அண்ணல், ஆலவாயான் ஆலவாய் அரன் என்னும் பெயர்கள் தேவாரம் முதலிய நூல்களில் கூறப்படுகின்றன. மதுரை மாநகக்கு ஆலவாய் என்று ஏன் பெயர் வந்தது? நீர் சூழ்ந்த இடத்திலே இருந்த படியினாலே ஆலவாய் என்று பெயர் உண்டாயிற்று. (அஞ்சிறைத் தும்பி. 124)
ஆலறு: ஆல் என்றால் நீர். ஆலில் இருந்து (நீரில் இருந்து) தோன்றியது ஆறு. ஆல் அறுத்துக்கொண்டு பாய்ந்த இடம் ஆல் அறு என்று கூறப்பட்டதுபோலும். ஆலறு என்னும் சொல் பிற்காலத்தில் ஆறு என்று திரிந்து வழங்கியது போலும். நீர் தாழ்ந்த இடத்தை நோக்கி ஓடும் இயல்புள்ளது. ஆகவே ஆல் (நீர்) அறுத்துச் சென்ற வழி ஆலறு என்று வழங்கப்பட்டது என்பதில் என்ன தடை? பிறகு ஆலறு என்னுஞ்சொல் ஆறு என்று மருவியதில் என்ன ஐயம்? ஆறு என்னுஞ் சொல் இடு குறிப் பெயர் என்று கருதி வந்தது தவறு என்பதும் அது ஆல் (நீர்) என்னும் சொல்லடியாகப் பிறந்த காரணப் பெயர் என்பதும் தெளிவாகிறது. (அஞ்சிறைத் தும்பி. 126)
ஆவஞ்சி: ஆவஞ்சி எனினும் குடுக்கை எனினும், இடக்கை எனினும் ஒக்கும். அதற்கு ஆவினுடைய வஞ்சித் தோலைப் போர்த்தலால் ஆவஞ்சி என்று பெயராயிற்று; குடுக்கையாக அடைத்தலால் குடுக்கை என்று பெயராயிற்று; வினைக் கிரியைகள் க்கையால் செய்தலின் க்கை என்று பெயராயிற்று.
(சிலம்பு. 3: 26. அடியார்.)
ஆவி: ஆவி என்றார் காதலிக்கப்படும் பொருள்கள் எல்லாவற்றினும் சிறந்தமையான். (ஆவி - உயிர்)
(திருக்கோ. 5: பேரா.)