46
இளங்குமரனார் தமிழ் வளம் – 3 3
ஆவினன்குடி: சித்தன் வாழ்வென்று சொல்லுகின்றவூர் முற்காலத்து ஆவினன்குடி என்று பெயர் பெற்றது.
(முருகு.175
―
6. நச்)
ஆழ்துயர்: ஆழ்தற்கு இடமாம் துயர். (திருக்கோ. 89. பேரா.) ஆழி: ஆழ்ந்திருப்பது ஆழி. (கடல்)
(ஒப்பியன் மொழிநூல். 157.)
ஆளத்தி: பண்ணைப் பாடும்போது ஏற்றியும் இறக்கியும் அலுக்கியும் இனிமை வளர்ப்பது ஆளத்தி எனப்படும். அஃது க்காலத்தில் ஆலாபனை, ஆலாபனம் எனப்படுகிறது. இவற்றுக் கெல்லாம் வேர், ஆல் என்னும் தமிழ்ச் சொல்லே. ஆலுதல் சுற்றுதல் ஆடுதல். ஆலத்தி என்னுஞ் சொல்லை நோக்குக. (ஒப்பியன் மொழி நூல். 113 114) ஆற்றுதல்: ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு
உதவுதல்.
―
(கலி. 133..)
ஆற்றொழுக்கு: ஆற்றொழுக்கு என்பது, ஆற்றுநீர் தொடர் வறாது ஒழுகுமதுபோலச் சூத்திரங்களும் தம்முள் இயைபு பட்டு ஒழுகுவது. (நன். 18. மயிலை.). (இறை. 54. நச்)
ஆறாட்டு:
(ஆற்றில் நீராடி இன்புறுதல்) ஆற்றிலும் கடலிலும் நீராடி இன்புறுவதும் பண்டை நாளைய செல்வ வேந்தர் வழக்கமாகும். "யாறும் குளனும் காவும் ஆடிப்பதி கந்து நுகர்தலும் உரிய என்ப" என்பதனால் (தொல். பொருள். கற்பு. 50) இது தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே வரும் வழக்காறு என்பது தெளிவாம். ஆறாடி மகிழும் திறத்தை இப்போதும் கேரள நாட்டார் ஆறாட்டு என வழங்குகின்றனர். நார்முடிச் சேரல் சேர நாட்டில் அரசு புரிந்த காலத்தில் நிகழ்ந்த ஆறாட்டு ஒன்றைக் காப்பியனார் கண்டு வியந்து பாடியுள்ளார். (காப்பியனார் காப்பியாற்றுக் காப்பியனார்)
-
(சேரமன்னர் வரலாறு. 147.)
ஆறு: (1) நிலமெங்கும் ஒரே சோலையாயிருந்த காலத்தில் இடையிடை யோடும் ஆறுகளே, ஊடு நீந்தியும் ஒரமாக நடந்தும் செல்லும் வழிகளாயிருந்தமையின், வழி ‘ஆறு' எனப் பட்டது. (சொல். கட். 18)
(2) நதி, வழி. இது முதனிலை நீண்ட தொழிலாகு பெயர். நதியானது தரையை அறுத்துக்கொண்டும் காடு காடு முதலா