சொற்பொருள் நுண்மைவிளக்கம்
55
(2) இரை என்பது இரைதல், இரைந்து, இரைக்க முதலியன வாய் வருதலன்றி ஈறுபோய் வேறுபட்டு இரற்றல், இரற்று, இரட்டல், இரட்டு, இரங்கல், இரங்கு முதலியனவாயும் வரும். இரட்டு, இரற்று முதலியன பெயராயும் நிற்கும். இரையும் வேறே, இரற்று முதலியனவும் வேறே என்பாரும் உளர்.
அ. குமாரசாமிப்பிள்ளை. செந்தமிழ். 11:120.) இல்லறம்: இல்லறமாவது இல்லின்கண் இருந்து தான முதலாயின செய்தல். (திருக். இல்லறவியல். மணக்) இல்வாழ்க்கை: (1) அஃதாவது இல்லாளோட கூடிவாழ் தலினது சிறப்பு. (திருக். 41. பரி.)
(2) இல்வாழ்க்கையாவது இல்லின்கண் இருந்து வாழ்வார் வாழுந்திறன். (திருக். 41. மணக்.)
·
இலக்கம்: இலக்கு- குறி. இலக்கு- இலக்கம். போர் மறவர் வேல் எறிந்து பழகுவதற்குக் குறிமரமாக நிறுத்தப்படும் கம்பம் இலக்கம் எனப்படும். (திருக்குறள் மரபுரை. 627)
இலக்கு: (1) இலக்கு = இலை, எய்யுங்குறி.
விற்பயிற்சியிலும் விற்போட்டியிலும் பெரும்பாலும் ஒரு மரத்து உச்சியில் உள்ள இலையே இலக்காக வைத்து எய்வதே பண்டை வழக்கம். இலக்கு - ஒரு குறித்த இடம் (நெல்லை வழக்கு) (வடமொழி வரலாறு. 89)
(2) இலையை இலக்கு என்பது இன்றும் தென்பாண்டி வழக்காகும். சிறு நுண்மைக்குப் பெரும்பாலும் இலையையே குறியாகக் கொண்டமையால் இலக்கு என்னும் சொற்குக் குறி என்னும் பொருள் தோன்றிற்று.
இலக்கணமும் மொழியின் அல்லது இலக்கியத்தின் சிறந்த அமைப்பையும் நடையையும் எடுத்துக் கூறுவதையே குறிக் கோளாகக் கொண்டமையின் அப்பெயர் பெற்றது. இலக்கு + அணம் இலக்கணம்.
“உள்ளுரை தெய்வம் ஒழிந்ததை நிலனெனக் கொள்ளும் என்ப குறியறிந் தோரே”
என்னுந் தொல்காப்பிய நூற்பாவில் (993) குறி என்னுஞ் சொல் இலக்கணத்தைக் குறித்தல் காண்க. இலக்கியம் இலக்கணம் என்னும் இருசொல்லுக்கும் ஒரு முதனிலையே. பொருள்