உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

இளங்குமரனார் தமிழ் வளம் – 3

வேறுபாடுபற்றி ஈறுவேறுபட்டன. இவை இரண்டும் முதனிலை யினாலும் ஈற்றினாலும் தூய தென் சொல்லே என்று தெளிக.

(தமிழ் வரலாறு. 107)

இலக்கியம்: இலக்கியம் என்பது தூய தமிழ் சொல். தனை இலக்கு + இயம் எனப் பிரிக்கலாம். இது குறிக்கோளை இயம்புவது என்னும் பொருளைத் தருவது. வாழ்வின் குறிக் கோளை வகையுற எடுத்து இயம்புவதே இலக்கியமாகும்.

(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல். 1.)

இலை: (1) இலை, புளி வேம்பு முதலியவற்றின் இலை; தாள், நெல் புல் முதலியவற்றின் இலை; தோகை, சோளம் கரும்பு முதலியவற்றின் இலை; ஓலை, தென்னை பனை முதலியவற்றின் (சொல் கட். 66.)

லை.

(2) இலைகளை நால்வகையாக வகுத்து, வேம்பும் வாழை யும் போல மெல்லிதாய் இருப்பதை இலை என்றும், நெல்லும் புல்லும் போலத் தாளை (தண்டை) ஒட்டி, நீண்டு சுரசுரப்பாக இருப்பதைத் தாள் என்றும், சோளமும் கரும்பும், போலப் பெருந்தாளாக இருப்பதைத் தோகை என்றும், தென்னையும் பனையும் போலத் திண்ணமாய் இருப்பதை ஓலை என்றும் வழங்கினர். (கழகப் பொன்விழா மலர். 49)

இலைப்புரை கிளைத்தல்: இலை விழுந்து மோதிக் கிடக்கும் சிறு குழிகளை எல்லாம் கிண்டிக் கிளைத்து ஒரு பொருளைத் தேடிப் பார்த்தலுக்கு இலைப்புரை கிளைத்தல் என்று பெயர். இவ்வழக்கு, ஒருவனை எல்லாவிடமும் துருவித் தேடிப் பார்த் தலையும் குறிக்கும்

(சொல். கட். 12.)

இலைமறைகாய்: இலைக்குள் மறைந்து கிடந்த சிலர் கண்ணுக்குத் தோன்றாது சிலர் கண்ணுக்கு மட்டும் தோன்றும் காய் இலைமறைகாய். முந்தின ஆசிரியர்க்குத் தோன்றாது பிந்தின ஆசிரியர்க்குத் தோன்றும் மொழியியல்புகளை இலை மறை காய் என்பது இலக்கண ஆசிரியர் வழக்கம். (சொல். கட். 14) இவை: இவை என்பது தன் முன் உள்ளவற்றை.

(திருக்கோ: 223. போகிய)

இழவு: இழவென்பது, தந்தையும் தாயும் முதலான சுற்றத் தாரையும் இன்பம் பயக்கும் நுகர்ச்சி முதலாயனவற்றையும் (தொல். பொருள் 253. பேரா.)

இழத்தல்.