சொற்பொருள் நுண்மைவிளக்கம்
57
இழுக்குதல்: மேல் நோக்கில் நல்ல நிலத்துக்கும் புதை மணல் அல்லது புதை சேற்று மண்ணுக்கும் வேற்றுமை காண முடியாது. தவறி அதில் சறுக்கியவன் புற உதவி கிட்டினாலன்றி மெல்ல மெல்ல, படிப்படியாகவே ஆனால், மீளாவகையில் அழிவு நோக்கிச் செல்வது போலப் போலிப் பண்புகளான அடிப்படைப் பண்புக் கேடுகளில் ஒரு சிறிது சறுக்கியவர்கூட மெல்ல மெல்ல, படிப்படியாகவே, ஆனால் மீளா வகையில் கேடு நோக்கிச் சென்றழிவர் என்பதை இழுக்குதல் என்ற இத்தமிழ்ச்சொல் நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறது.
(திருக்குறள். மணிவிளக்கவுரை. I. 839.)
இழை: (1) காக்கும் தெய்வமாகிய திருமாலின் ஐந்து படைக்கலங்களும் எழுதி நூலிலே கோத்துக் கழுத்திலே அணிந் தால் பீடை அணுகாது என்பது பண்டையோர் கொள்கை. அ இதனாலேயே இழை என்னும் பெயர் நகைக்கு அமைந்தது. நூலின் பெயராகிய இழை என்பது நகையின் பெயராயிற்று.
அை
(தமிழகம் அலையும் கலையும். 177.)
(2) இழைப்பு வேலைப்பாடு கொண்ட நகை, இழை எனப் பெயர் பெற்றது. பொன்னைக் கம்பிகளாக இழைத்துச் செய்யப் பட்ட நகை இழை எனப்பட்டது போலும் ! ‘கல்லிழைத்த நகை’ என்பது இக்கால வழக்கிலும் உள்ளதேயாகும். எனவே பொன் வடங்களும், கல் இழைத்துச் செய்யப்பட்ட நகைகளும் ‘இழை’ எனப் பெயர் பெற்றிருக்கலாம். பின்பு காலப்போக்கில் இழை என்பது எல்லா நகைகளையும் குறிக்கலாயிற்று போலும் !
(பத்துப்பாட்டு ஆராய்ச்சி. 527)
(3) பொன் வேறாகவும் மணிகள் வேறாகவும் எளிதில் பிரிந்து சிதறாதபடி இணைப்பாக இழைக்கப்பட்ட அணி கலன்களை இழை என்பது உணர்த்தும். (சங்க நூற் கட்டுரைகள். 56) இளங்காடு: : பசுக்கள் முதலியன மேயாமல் காக்கின்ற (பெரும்பாண். 184 - 5. நச்)
இளங்காடு.
இளிவு: இளிவு என்பது பிறரால் இகழப்பட்டு எளிய
னாதல்.
(தொல். பொருள். 253. பேரா.)
(நற்றிணை. 162. அ. நாராயண.)
இற்றி: இச்சிமரமென இக்காலத்து வழங்குகிறது.