சொற்பொருள் நுண்மைவிளக்கம்
59
இறை: (1) இறை எனப்படுவார் தந்தையரும் ஆசிரியரும் அரசரும் முதலாயினார். (தொல். பொருள். 256. பேரா.)
(2) தமிழில் இறை என்பது இறைவன் நிலத்தின் பேரில் வாங்கும் ஆறில் ஒரு கடமைக்குப் பெயராகும். அதனால் தான் இறைவனுக்கும் (அரசன்) அப்பெயர் வந்தது. இறை வாங்குபவன் இறைவன் அல்லவா ! இவ்விதக் கடமையை இறைவனுக்குச் செலுத்தாத நிலங்கள் ஆலயங்களுக்குத் தானமாகக் கொடுக்கப் பட்டிருந்தால் “இறையிலி தேவதானம்” என்று பெயர் பெறும்.
(செந்தமிழ்ச் செல்வி. 12: 80 -81.)
(3) இறை அல்லது இறைவன் என்பது, அரசனுக்கும் கடவுட்கும் பொதுப்பெயர். 'கடவுள் எங்கும் தங்கியிருப்பது போல, அரசனுடை ஆணை, அவனுடை ய நாடெங்கும் தங்கியிருக்கிறது என்பது கருத்து, இறுத்தல் - தங்குதல்.
ய ஆ
(சொல். கட். 24.)
இறைச்சி: இறைச்சி என்பதற்குத் தங்கியது என்பது பொருள். கருப் பொருளில் தங்கிய கருத்துக்கள் எனக் கொள்க. அவை, சொல்லுவார் கருத்துக்கு ஓரளவு உவமை போல் பயன்படினும் படும். (கலி. 2. உரைவிளக்கம். இளவழ.)
இறையிலி: வரி விதிக்கப் பெறாமல் ஒதுக்கப் பெற்ற நிலம் இறையிலி எனப்படும்.
சைவ வைணவத் திருக்கோயில்களுக்கு இறையிலியாக அளிக்கப்பட்ட நிலங்கள் "தேவதானம்' தேவதானம்’ எனவும், சைன பௌத்தக் கோயில்களுக்கு அளிக்கப் பெற்றவை ‘பற்றிச் சந்தம்’ எனவும், பார்ப்பனர்க்கு விடப்பெற்றவை 'பிரமதேயம் பட்ட விருத்தி' எனவும், அறிநிலையங்கட்கு விடப் பெற்றவை ‘சாலா போகம்' எனவும் வழங்கப்பெற்றன. புலவர்க்கு அளிக்கப்பெற்றது 'புலவர் முற்றூட்டு' எனப்படும்.
(முதற் குலோத்துங்க சோழன். 89 - 90.) இறைவன்: 'எப்பொருளினும் தங்குகின்றவன்' என்று பொருளுரைப்பர் அடியார்க்கு நல்லார் (சிலம்பு. நாடுகாண். 184) இறுத்தல்' தங்குதல் என்னும் பொருட்டாதல் “மல்லன் மூதூர் மாலைவந் திறுத்தென” என்பதனுள்ளும் (சிலம்பு. அந்திமாலை. (திருவாசக விரிவுரை. சிவபு. 1-5. மறைமலை.)
20) TOOT G.
இன்சொல்: கேள்வியினும் வினையினும் இனியவாய
சொல்.
(திருக். 387. பரி.)