உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

IT

FT: “ஈ' என்ற தமிழ்ச் சொல்லைப் பல்லை வெளியே திறந்து காட்டாமல் உச்சரிக்க முடியாது. ‘ஈ என்பவன் உடையவன் முன்னர் ஒரு முறைதான் பல்லைக் காட்டுகிறான். ஆனால் ‘ஈயேன்' என்பவனோ இல்லாதவன் முன்னர் ஒருமுறைக்கு இருமுறை 'ஈ' என்றும் ‘யேன்' என்றும் பல்லைக்காட்டி ஆக வேண்டியிருக்கிறது. ஆகவே இது மிகமிக இழிந்த நிலை (தமிழ் உள்ளம். 120.)

யாயிற்று.

ஈகை: (1) அஃதாவது புகழைக் கருதியாயினும் மறுமைக்கு உறுதி வேண்டி ஆயினும் ஏற்கின்ற பேர் முகங்கண்டு மகிழ்ச்சி யாகக் குளிர்ந்த சொல்லுடனே தனக்கு இயன்ற மாத்திரம் மாறாமற் கொடுப்பதாம். (நாலடி. ஈகை. தருமர்.)

(2) வறியராயினார் யாவராயினும் யாதானும் ஒன்றை வேண்டி வந்தால் அவர் தம் வறுமை கூறுவதன் முன்னே அறிந்து தமக்கு இயன்றபடி கிருபையினாலே உவந்து கடுகக் கொடுத்தலும், அறம் புகழ் என்பது கருதிக் கொடுத்தலும் ஆகிய கொடை. (நாலடி. ஈகை. பதுமனார்.)

ஈதல்: (1) அளித்தல் என்பது அன்பினாற் கொடுத்தலை யும், இடுதல் என்பத கீழிட்டுக் கொடுத்தலாகிய இரப்போர்க் கீதலையும் ; வழங்கல் என்பது எடுத்துக் கொடுத்தலையும் குறிக்கும். அருள்தல் என்பது அருளிக் கொடுத்தல். (சொல். கட். 56.)

(2) ஈவு (வகுத்து வந்த எண்) ஈ (ஆயிரக்கணக்கில் மொய்க்கும் சிற்றுயிர்) ஈட்டு (சிறுக உழைத்துத் திரட்டு) ஈண்டு (திரள்வுறு) ஈடு (சரிக்குச்சரி) ஆகிய தொடர்புச் சொற்கள் ஈதலின் பொருட்பண்பு சுட்டுகிறது. பலகாலம் பல தடவை சிறுகச் சிறுக உழைத்துத் திரட்டிய பொருளை ஒருவர் பலருக்குப் பலகாலம் பல தடவை தேவை அறிந்தும் தகுதி அறிந்தும் பகிர்ந்து கொடுத்தலையே இச்சொல் குறிக்கிறது.

(திருக்குறள். மணிவிளக்கவுரை. III. 388.)

ஈதா: ஈதா என்பது ஒரு மரூஉ முடிபு; அஃது இக் காலத்து

‘இந்தா' என்று வழங்கப்படும்.

(பரிபாடல். 6: 60. பரி.)