உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

இளங்குமரனார் தமிழ் வளம் – 3

உடனிருந்து ஆராய்ந்தே காரியங்களை நடத்துவது வழக்கம் இவ் வதிகாரிகளை “உடன் கூட்டத்ததிகாரிகள்” என்று கல்வெட்டுக் களும், செப்பேடுகளும் கூறுகின்றன.

(முதற் குலோத்துங்க சோழன். 83 - 84.)

உடை : (1) உடம்பைச் சூழ்ந்திருக்கும் உடை எனப்படுவது புறப்பற்றுக்களின் துவக்கம் ஆகின்றது. இதிலிருந்தே உடைமை என்னும் ஏனைப்புறப்பற்றுக்களாகிய செல்வங்கள் எல்லாம் முறையே கிளைத்துச் சூழலிட்டுச் செல்லுதலும் அறியப்படும்.

(சங்க நூற்கட்டுரைகள். II. 44)

(2) சூழக்கட்டுதல் என்னும் பொருளில் உடை எனவும் அலை அலையாக அசையக் கட்டுதல் என்னும் பொருளில் ஆடை எனவும் நம்முன்னோர் முறையே பெயரமைத்து வழங்கி யிருக்கின்றனர். (சங்க நூற் கட்டுரைகள். II. 55)

உடைமை: உடைமை மை என்ற சொல் தமிழில் உடை என்பதி னின்றும், அவ் உடை என்பதும் உடு என்பதினின்றும் பிறந் துள்ளதனைக் காணலாம். உடை என்பது உடலுக்குப் புறம்பாக அதனொடு சார அணியப்படும் ஆடை. உடுத்தல் சூழ்வரச் சுற்றி வரிதல். உடைமை இதனால் சார்பொருளும் புறப்பொருளுமே சுட்டின.

உடை என்பது பேல உடல் என்பது 'உடு உடு' என்ற வேர்ச் சொல்லில் இருந்து பிறந்ததே. உண்மையில் உடு என்ற வினைப் பகுதியுடன் ஐ, அல் ஆகிய தொழிற் பெயர் விகுதிகள் சேர்ந்த வடிவங்களே இவ்விரு சொற்களும். உடலும் உடையும் ஒரு வர்க்குச் சார் பொருள்கள். முன்னது அகச் சார்பு. பின்னது புறச் சார்பு. ஆனால் உடல் அகச் சார்பானால் உடை புறச் சார் பானால், உடைமை புறப்புறச் சார்பு என்பது தெளிவு.

(திருக்குறள். மணிவிளக்கவுரை. III. 248.)

உடுக்கை: உடுக்கின்ற ஆடையை உடுக்கை என்றார் திருவள்ளுவர்.... உடுக்கை என்பதும் உடுப்பு என்பதும் ஒரே அடிச் சொல்லினின்றும் பிறந்தனவே ஆயினும் அவற்றின்

இடையே பொருள் வேற்றுமை உண்டு. இடுப்பில் உடுத்தும் உடை ‘உடுக்கை” என்றும், மேலே அணியும் சட்டை ‘உடுப்பு' என்றும் க்காலத்தில் வழங்கப் பெறுகின்றன.

(தமிழகம் அலையும் கலையும். 174.)