சொற்பொருள் நுண்மைவிளக்கம்
65
உண்கண்: உண்கண் - கண்டோர் நெஞ்சத்தை உண்ணும் கண். மையுண்ட கண்ணுமாம். (கலி. 108. விளக்கம். பெருமழை.) உண்ை திரள் வடிவினை
உண்டை:
உணர்த்தல்
ன திவாகரத்துள் காண்க. உருள் என்னும் முதனிலையிற்றோன்றிய உருண்டை என்னுஞ் சொல் இடைக்குறைந்து ‘உண்டை என்றாயிற்று.
(திருவாசக விரிவுரை. மறைமலை. 193)
ண்மை: உண்மையாவது விகாரமின்றி இயல்பாய் நிற்றல். (தொல். எழுத்து. 256. சி. கணேச.)
உணர்வு: உணர்வு என்பது அறிவுடைமை. அஃதாவது உலகியலால் செய்யத் தகுவது அறிதல்.(தொல். பொருள். 273. பேரா.)
உத்தரம் தக்கணம்: ஒரு காலத்தில் பனிமலை கடலுக்குள் முழுகியும் தென்பெருங் கடல் குமரிமலையைக் கொண்ட உயர் நிலமாயுமிருந்ததினால், நாவலந்தேயத்தில் வடபால் தாழ்ந்தும் தென்பால் உயர்ந்தும் இருந்தது. பனிமலை எழுந்து குமரிமலை இருந்தது.பனிமலை முழுகியபின், வடபால் உயர்ந்தும் தென்பால் தாழ்ந்தும் இருக் கின்றது. இதனால் வடதிசைக்கு உத்தரம் என்றும், தென் திசைக்குத் தக்கணம் என்றும் பெயர். உ = உயர்வு; தக்கு= தாழ்வு; தரம் அணம் என்பன ஈறுகள். உகப்பு, உச்சி, உம்பர், உயரம், உன்னு, உன்னதம் முதலிய சொற்களில் உகரவடி உயர்வு குறித்தலையும், தக்குத் தொண்டை என்னும் உலக வழக்கில், தக்கு என்பது தாழ்வு குறித்தலையுங் காண்க. தரம் என்பது நிலை எனினும் ஒக்கும். (சொல். கட். 18.)
=
-
-
உப்பாடு: (துளுமொழியில்) உப்பாடு ஊறுகாய். உப்பு + ஆடு உப்பாடு. நீருப்பு ஊறவைத்த காய் (ஊறுகாய்) வை துளுமொழியா தமிழ் மொழியா என்னும் வேறுபாடு ல்லாமல் இருக்கின்றன.
(மயிலை. சீனி. வேங். துளுமொழியும் தமிழ்மொழியும். கட்)
உப்பு: உப்புணா எல்லா வளர்ச்சிக்கும் முதற்காரணமாய் இருக்கும் செந்நீரையும் எலும்பையும் செழுமை செய்து வலு வூட்டி வருகின்றது. பருத்தல் என்னும் பொருளில் வரும் ‘உப்பு தல்' என்னும் சொல் இதன் செழுமைப் பயனை நமக்கு நினை வூட்டும். சுவையுள்ளும் இதனை முதன்மைச் சுவையாக நம்ம னோர் கருதி வந்தனர் என்பது 'சுவைபார்த்தல்' என்னும் பொருளில் உப்புப் பார்த்தல் என்னும் தொடரை வழங்கி வருதல்