எ
எ
எக்கர்: நீர் கொணர்ந்து குவித்த மணற்றிடர்.
(ஐங்குறு. 19. விளக்கம். பெருமழை.)
எங்கை: என் தங்கை என்றவாறு.
(திருக்கோ. 373. பேரா.)
எச்சம்: எச்சம் - சந்ததி. தான் இறந்தொழிய எஞ்சி நிற்பது சந்ததி ஆதலால் சந்ததி எச்சம் எனப்பட்டது.
(திருக்குறள். தண்டி. 112.)
(2) “தம்மால் ஆக்கப்பட்டுத் தமக்குப்பின் தம்பெயர் விளக்கி நிற்கும் புகழும்” எச்சம் ஆகும். (திருக்குறள். தண்டி. 238.) எச்சவகை: எச்சவகை என்பது, சொல்லப்படாத மொழி களைக் குறித்துக் கொள்ளச் செய்தல். அது கூற்றினும் குறிப் பினும் வருதலின் வகை என்றான். (தொல். பொருள். 313. பேரா.) எட்டி, காவிதி: எட்டி காவிதி என்பன தேய வழக்காகிய சிறப்புப்பெயர். (தொல். எழுத்து. 154. நச்.)
...
எண்கு: கரடியின் பெயர் சங்க நூல்களில் எண்கு என்றே வழங்கியிருப்பது குறிப்பிடத் தக்கது தெலுங்கு மொழியில் கரடியை எலுகு' என்று வழங்குகின்றனர். இச்சொல் சங்க காலச் சொல்லான எண்கு என்பதன் மறு உருவமே.
6
(சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம். 211.)
எந்திரம்: எந்திரம் என்ற சொல் பொறி (‘machine') ஐக் குறித் துள்ளது. 'இயன் திறம்' (இயங்கும் தன்மையது) என்பதுவே எந்திரம் என்று மாறியுள்ளது. (புறம். 322.) (பழந்தமிழ். 240.)
எய்யாமை: தெரியாமை என்பது ஒற்றின் நீக்கமாய் எய்யாமை ஆயிற்று. எய்யாமை - அறியாமை. இதன் உடன் பாடு தெரிதல் என்பது. இங்ஙனம் இருப்ப எய்த்தல் உடன் பாடு
என்பர்.
குறவன் என்பதற்குப் பெண்பால் குறத்தி; குறத்தியின் திரிபு கொடிச்சி ; கொடிச்சி என்பதற்கு ஆண்பால் கொடியன் ஆகாது போல, எய்யாமை என்பதற்கு உடன்பாடு எய்தல் ஆகாது.