76
இளங்குமரனார் தமிழ் வளம் – 3
கொடிச்சி என்பதற்கு ஆண்பால் குறவன் ஆதல் போல எய் யாமை என்பதற்கு உடன்பாடு தெரிதல் ஆகும்.
66
"எய்யாமையே அறியாமையே"
என்ற தொல்காப்பிய சூத்திரத்தின் கீழ் அறிதற் பொருட்டாய் எய்தலென்றானும் எய்த்தலென்றானும் சான்றோர் செய்யுட் கண் வாராமையின் எய்யாமை என்பது எதிர்மறை அன்மை அறிக என்பர் சேனாவரையர். மறைச்சொல் என்பர் நச்சினார்க்கினியர். எய்த்தல் என்னுஞ்சொல் அறிதற் பொருளில் அக்காலத் திருப்பின் தொல்காப்பியர் அச்சொல்லையே கூறியிருப்பர்.
(மொழி நூல். (கார்த்) இலக்கணவியல். 143.)
எருது: எருது என்ற தமிழ்ப் பதம் பழங் கன்னடத்தில்‘ஏர்து’ என்று வழங்குகின்றது. அது ‘ஏர்’ என்ற தாதுவின் அடியாகப் பிறந்த சொல். ஏர்த் தொழிலாகிய உழவுக்குப் பயன்படும் காளைமாடுகளை ‘ஏர்து' என்று கன்னடத்திலும், 'எருது' என்று தமிழிலும் வழங்கலாயினர் என்பது நன்கு விளங்குகின்றது.
6
(தமிழ் விருந்து. 107.)
எருவை: தலைவெளுத்து உடல் சிவந்திருக்கும் பருந்து, கழுகு எனினும் அமையும். (புறம் 64. ப. உ
எல்லா: எல்லா; கெழுதகைப் பொதுச்சொல்.
(அகம். 114. வேங்கட விளக்கு.)
எவ்வை: எவ்வை - தமக்கை. அன்னை என்னை எனவும், தந்தை எந்தை எனவும், வருதல் போன்று தவ்வை எவ்வை என வந்தது. (ஐங்குறு. 88. விளக்கம். பெருமழை)
எழிலி: எழிலி என்பது அழகு. எழில்வாய்ந்த பொருள் எழிலியாகும். (தமிழ் விருந்து, 4.)
-
எழு: எழு தடை மரம். அகத்தே நுழையுங் காலத்து மேலே எழுப்பப்படுதலால் எழு என்பது பெயராயிற்று. "சீப்புள் ளுறுத்துத் திண்ணெழுப் போக்கி" என்றார் உஞ்சைக் காண் டத்தும். “எழுவுஞ் சீப்பும் முழுவிறல் கணையமும்" என்றார் இளங்கோவடிகளாரும்.
(15: 215)
(பெருங் இலாவண. 5. 38. பெருமழை.)
எழுங்குலை: இளங்குலை. செழுங்குலை - முதிர்ந்தகுலை.
(திருக்கோ. 250. பேரா)