உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

77

எழுத்து: (1) எழுத்து என்றது யாதனை எனின், கட்புலன் ஆகா உருவும், கட்புலன் ஆகிய வடிவும் உடைத்தாக வேறு வேறு தன்னையே உணர்த்தியும் சொற்கு

வகுத்துக்கொண்டு இயைந்தும் நிற்கும் ஓசையாம்.

(2) எழுதப்படுதலின் எழுத்தே.

(தொல். சிறப்புப்பாயிரம். நச்.)

(யா. வி. 1)

(3) எழு என்பதன் அடியாகப் பிறந்த எழுதல் என்பது ஓசை எழுதலுக்கும் எழுப்புதலுக்கும் பொருந்தும் கிளத்தல் (ஓசை எழுப்புதல்) என்பதற்குக் ‘கிள’ என்பது பகுதி. இதில் நின்றும் 'கிளவி' என்னும் சொல் பிறந்து சொல்லையும் ஒரோவழி எழுத்தையும் உணர்த்தும். (தமிழ்மொழி வரலாறு; 28. கவிராசர்.)

66

எழுதெழில்: ஓவியர் பார்த்து எழுதுதற்கு ஏதுவாகிய அழகு. (அகம். 176. வேங்கட விளக்கு)

எழுவுஞ்சீப்பு: கதவுக்கு வலியாக உள்வாயிற்படியிலே வீழாது எடுக்கவிடும் மரங்கள் ‘கதவோடு பொருந்தின மேலில் தாழுமாம்; நிரைத்த கதவுமாம்; திறக்குங்காலத்து மேலே எழுப்புகையால் எழுவுஞ்சீப்பு என்றார். (சிலப். 15-215. அரும்பத.)

6

எற்பாடு: (1) எல்படும் பொழுதை எற்பாடு என்பது தமிழ் வழக்கு. இன்றும், தமிழ்வழக்கு அழியா மேல்கடற்கரையில் படுஞாயிற்றின் திசையைப் 'படுஞாயிறு' என வழங்குதல் உலகறிந்த செய்தி. (தொல்காப்பியர் பொருட்படலம்.18.)

(2) எற்பாடு என்னும் சொல்லுக்கு ஞாயிற்றின் உதய காலம் எனப் பொருள் கொண்டாரும் உளர் (முதல் சூத்திர விருத்தி) எனினும் கதிரவன் மறையும். (எல் -கதிரவன்; படுதல் - மறைதல்) மாலைக்காலம் எனக் கொள்ளுதலே சிறப்புடையது. நச்சினார்க் கினியர், சிலப்பதிகார உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார், நாற்கவிராச நம்பி முதலோரும், தொல்காப்பியத்தின் பொருள் அதிகாரத்துக்குப் புத்துரை வகுத்த டாக்டர் சோம சுந்தர பாரதியாரும் மாலை என்றே பொருள் கொண்டனர். டாக்டர் பாரதியாரவர்களின் அகத்திணையியல் உரை நூலுள் 18-24 24 பக்கங்களில், இதுபற்றிய விளக்கம் காணலாம். ஐங்குறு நூற்றின் பழைய உரையாசிரியரும் 'எற்பாடு' என்பதை மாலை எனவே கொண்டார். (ஐங். 116. உரைக் குறிப்பு) என்பு: எலும்பு என்பது எல்லோரும் அறிந்த சொல். இலக்கியங்களில் இச்சொல் என்பு என வழங்குகின்றது....

L