உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

அருட்பணி :

உள்ளார

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

உலகில் வாழும் மாந்தர் அனைவரும் போர் வெறியர் தாமா? போர் வெறியைப் பழிப்போர் இலரா? நல்வழிப்படுத்தும் நாட்டமிக்குத் தொண்டு செய்ய முன்வருவோர் இலரா? அங்கொரு வரும் இங்கொருவரும் ஆக இருந்திருக்கின்றனர். அவர்கள் தம்மையே அமைதிப்பணிக்கு ஒப்படைத்துந் தொண்டாற்றினர். பொருள் இழப்புகளுக்கோபுண்பாடுகளுக்கோ அவர்கள் அஞ்சினர் அல்லர். தம் உயிரை ஈந்தும் அமைதிப் பணியாற்றுவதற்குப் புன்முறுவலுடன் நின்றனர். அத்தகை யவர்கள் அமைதிப்பணியே உலகத்தை அழிவில் இருந்து இதுவரை காத்து வந்துள்ளது. எதிர்காலத்திலும் அத்தகையவர்கள் பணியால் தான் உலகம் வாழவும் போகின்றது. ஆகவே, "வாழ்க அமைதிப் பணியாளர்கள்" என்று நாம் வாழ்த்துவோம். ஏனெனில், அவர்களே உலகத்தை வாழவைக்கின்றார்கள்!