உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகம்:

2. அறவோர் உள்ளம்

உலகம் என்பது யாது? அது மண்ணா? கல்லா? மரமா? செடியா? வளியா? ஒளியா? உடலா? உயிரா? எந்த ஒன்றும் உலகம் இல்லை. எல்லாமும் கூடிய ஒன்றே உலகம். ஆனால், உலகை உலகாக வைத்திருப்பது எது? மேலே கண்டவை எல்லாம் உடலின் உறுப்புகள் போன்றனவே. உலகின் உயிர் அறவோரே ஆவர்! அறவோர் இல்லா உலகம் உயிரிலா உடல் போன்றது. அவ்வுலகம் மண்ணாக இருக்குமே அன்றி மதிக்கத்தக்கதாக இருக்காது. அறவோரே உலகை, உலகாக வைத்திருக்கின்றனர். உயிர் வாழ்வுக்கு உரியதாகவும் வைத்திருக்கின்றனர். ஆதலால் அன்றோ,

166

1 "பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன்’

என்றார் வள்ளுவர்.

2 66

“தமக்கென முயலா நோன்றாள் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே”, "உண்டால் அம்ம இவ்வுலகம்"

என்று கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்னும் அரசர் பெருமான் இயம்பினான். ஆதலால் உலகம் உய்வது உயர்ந்த பெருமக்களால் தான் என்பதை உணரலாம். இதனைத் தெள்ளிதின் உணர்ந்தமையால், "உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே" என்பது வழக்கு மொழியாயிற்று.

அறவோர்:

உலகை உய்க்கும் அறவோர் எத்தகையர்? அறத்தைத் தம் உயிராகக் கொண்டவரே அறவோர்.அவர் தம் இலக்கணம் அறிதற்கு எங்குச் செல்லுதல் தகும்? அறநூலாம் திருக்குறளிடைச் 1. குறள்:996.

2.புறநானூறு: 182