உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

செல்லுதல் வேண்டும். ஏன் அவ்வற நூலிடைச் சேறல் வேண்டும்? அவ்வறம் பாடியவர் 'பொய்யில் புலவர்'ஆதலாலும், அவர் உரை + 'பொருள் உரை' ஆதலாலும் என்க.

4

அறவோரைப் பற்றிப் பொய்யில் புலவர் புகலும் பொருளுரை தான் என்ன?

"எவ்வுயிர்க்கும் துன்பம் தாராமல் இன்பந்தருவது எதுவோ அதுவே அறம்; அவ்வினையே அறவினை; அதனை ஆற்றுவோரே அறவோர்" என்பது வள்ளுவர் கருத்து. இதனை அவர் தம் நூலகத்துப் பரக்கக் காணலாம்.

பொய்யும் மெய்யும் :

எல்லாக் குற்றங்களுக்கும் தாய் போன்றது பொய்மையே என்பதும், எல்லா அறங்களிலும் தலையாயது வாய்மையே என்பதும் அறிஞர்கள் துணிவு ஆனால், உயிர்களின் இனியவாழ்வு ஒன்றையே உளத்துக் கொண்டு அறம் வகுத்த வள்ளுவரும் வாய்மையையே முழு முதல் அறமாகக் கொண்டிருந்துங் கூட, அதற்குத் தனி முதல் தலைமைதர விழைந்தார் அல்லர்.

கொல்லாமையாகிய அகிம்சையே முதல் அறம்; அக் கொல்லாமைக்குத் துணை நிற்குமானால் பொய்யாமையும் வாய்மையும் அறமே என்றார். இதனை,

1 66

-

"ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று”

என்னும் குறளால் அறியலாம். நல்லது கொல்லாமை என்னும் அளவில் நில்லாமல் 'ஒன்றாக' என்றதும், 'பொய்யாமை நன்று' என்னாமல் ‘அதன் பின்சாரப் பொய்யாமை நன்று' என்றதும் அறத்தின் ஆணிவேர் கொல்லாமையே எனத் தெளிவாக விளக்கு கின்றது. மேலும், அவர் வாய்மை என்பது உள்ளது உள்ளவாறே கூறல் என்பதாக இல்லாமல் “தீமை இல்லாதவற்றைச் சொல்லுதலே வாய்மை" என்பதையும், உயிர்களுக்குக் குற்றமற்ற நன்மையை விளைக்குமாறு சொல்வது பொய்யாக இருந்தால்கூட, அந்தப் பொழுதில் அது மெய்யாகவே கருதப்படும்" என்பதையும் ஊன்றி

3.4.மணிமேகலை 22 : 67.

1. குறள் : 323.