உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

இத்தகைய தொண்டர் பெருமையே பெருமை. அவர் தம் பெருமையை அறைதல் அரிது. "தொண்டர் தம் பெருமை சொல்ல ஒண்ணாதே" என்பது ஒளவையார் வாக்கு.

அறவோர்கள் உள்ளத்தில் பணிபுரியும் வேட்கை எழும்பு வானேன்? இறைவனிடம் அவர்கள் தம் பணிசெய்யும் வேட்கையை வெளிப்படுத்தி வேண்டுவானேன்?

ஈத்துவக்கும் இன்பம் :

இறைவன் உலகைப் படைத்தவன்; உயிர்களைப் படைத்தவன்; உயிருக்குள் உயிராக இருப்பவன். அவனுக்கு உயிர்களைத் துன்பங் களினின்று காத்து விடுதலை அளிப்பது பெருவிருப்பு. அவன் விருப்பை உண்மையாக உணர்ந்து அதனை நிறைவேற்றப் பாடுபடுதலே தொண்டர் கடன். ஆகவே உயிர்கள் படும் துன்பத்தைக் கண்ணால் காணவும், காதால் கேட்கவும் நைந்து நலிகின்றனர். அவற்றின் துயரைப் போக்குவதிலேயே இன்பங் காணுகின்றனர்.

"ஈதல் இன்பமிக்க செயல்; பெறுபவனுக்கு மட்டும் ன்பமானது அன்று ஈதல்; கொடுப்பவனுக்கும் இன்பம் பயப்பது' என்பது ஆய்ந்தவர்கள் தெளிவுரை. அவர்கள் 3 "ஈத்துவக்கும் இன்பம்' என்பர். பிறருக்கு ஈவதால் அதனைப் பெற்றவர் அடையும்

ன்பத்தைக் காணும் இன்பம் என்பதே இதன் விளக்கப் பொருள். ஈதல் இன்பம் போலவே தம் பணியால் பிறர் பெறும் இன்பமும் பேரின்பமேயாம்.

தாம் செய்யும் பணியால் பிறர் அடையும் நலங்களையும் நல்வாழ்வையும் காணுங்கால் அறவோர்களுக்கு உண்டாகும் உவகைக்கு அளவுண்டோ? பிறர் இன்பத்தைக் காணுமாறு அன்றே பெரும்பாடுபட்டனர்; துன்பங்களையும் புன்முறுவலுடன் ஏற்றுத்துணிந்து பணியாற்றினர். அதன் பயனைக் காணும் போது

ன்பம் ஏற்படாதா?இன்பப்பயனைக் காணுதற்கு வேட்கை எழும்பாதா? இன்பப்பயன் தரும் அத்தொண்டுக்குத் தம்மை ஆளாக்க அருட்பெருங்கடலாம் இறைவனிடம் வேண்டுதல் கிளம்பாதா? ஆசைகள் அனைத்தையும் துறந்து சென்ற பெரு மக்களுக்கும் ஓர் ஆசை இல்லாமல் ஒழியவில்லையே! 'எல்லா உயிரும் இன்புற்றிருக்க வேண்டும்' என்பது அவர்கள் ஆசை அல்லவா!

3 குறள் : 228

?