உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. சங்கச் சான்றோர் II

அளவிலாக் களிப்பு :

காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை ஆண்டு வந்தான் தொண்டைமான். அவன் படைப் பெருக்கமும் அரண் வலிமையும் மிக்கவன். தன் படைகளையும், அதன் ஆரவாரத்தையும், அரணச்சிறப்பையும் கண்டு கண்டு களிப் படைந்தான். அளவிறந்த களிப்பு அறமற்ற செயலுக்கு ஏவும் அல்லவா!

தகடூர்த் தலைவன்:

தொண்டைமான் தன் நாட்டை அடுத்திருந்த தகடூரை ஆண்டுவந்த அதியமானைத் தாக்கக் கருதினான். எளிதில் வென்று விடலாம் என்றும் உறுதிகொண்டான். ஆங்காங்கு ஒற்றர்களை வைத்திருந்த அதியமானுக்குத் தொண்டைமான் எண்ணம் ஒருவாறு புலப்பட்டது. அவனது தவறான திட்டத்தால் அவன் நாட்டு மக்கள் அழிந்து போவதை அதியமான் விரும்பினான் அல்லன். ஆராயாமல் அரசன் செய்யும் செயலுக்கு அவன் நாட்டு மக்கள் யாது செய்வர்? அரசன் பகைத்து நின்றாலும் அவன் நாட்டு மக்கள் பகைவர் அல்லரே! ஆகவே அறவழியால் போரைத் தடுக்கக் கருதினான் அதியமான்.

நாடறிந்த தமிழ்ப்பெருமாட்டி ஒளவையார். அவரைத் தொண்டைமானும் நன்கு அறிவான். ஆகவே ஒளவையாரைக் காஞ்சி மாநகருக்குத் தூதராக அனுப்பி வைத்தான்.

அதியன் அருள்நெறி:

அதியமான் மாபெரும் வீரன். 'நாள் ஒன்றுக்கு எட்டுத் தேர்களைச் செய்யும் தச்சன், ஒரு திங்கள் காலம் முயன்று ஒரு தேர்க் காலைச் செய்தால் அது எத்தகைய உறுதிப் பாட்டுடன் இருக்குமோ அத்தகைய உறுதிப்பாடுடையவன்" என்று ஒளவையாரால் பாராட்டப்பெற்றவன். அவனுடைய 'மழவர்' என்னும் படை வீரர்களோ போர் செய்தலைப் பொழுது