உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறவோர் அமைதிப் பணிகள்

113

அழியாப் படை; அடுத்து வந்தவற்றைத் தவறாமல் அழிக்கும் படை; இவற்றை அறிவாயாக" என்னும் உட்கருத்து விளங்க அல்லவோ ஔவையார் உரைத்தார்.

உண்மை உணர்ந்தான் தொண்டைமான். போர் எண்ணம் நீங்கினான். இரண்டு நாடுகளும் குருதி மழை கொட்டாமல் அமைந்து வாழ்ந்தன.

முயற்சியே உயர்ச்சி :

ஒளவையார் ஒரு புலவர்; அதிலும் ஒரு பெண்பாற் புலவர். அவர் எடுத்துக்கொண்ட அமைதித் தொண்டு மிகச் சீரியது. 'இஃது எம்மால் செய்தற்கு அரிது' என்று சிறிதும் சோர்வு கொள்ளாமல் முயற்சி செய்யவேண்டும். அத்தகைய முயற்சியை அமைதிப் பணிக்குக் கொண்டார் ஒளவையார்; வெற்றியும் கொண்டார்; அவர் 'தொண்டு வாழ்க' என வாழ்த்துதல் நம் கடன். ஏனெனில் எத்துணையோ உயிர்கள் வன்கொலைக்கு ஆளாகாமல் வாழ்ந்தன அல்லவா!

போர் மூளாமல் தடுப்பது நல்லது. மூண்டு விட்டால் என்ன செய்வது? அப்பொழுதும் கூட முடிந்தால் அமைதிப் பணிக்கு முயல்வது நலம். அவ்வாறு போர்க்களத்தில் இருபக்கத்தார்களும் கைகலந்த பின்னர்க் கூட, துணிந்து அமைதித் தொண்டாற்றிய சங்கச் சான்றோர்களும் சிலர் இருந்துள்ளனர். தம் உயிரைச் சிறிய அளவில் கூடப் பொருட்டாக எண்ணாமல் போரிடைப் புகுந்து அவர்கள் செய்த தொண்டு நினைவு கூறத்தக்கது.

சிறு பொறி :

ஓர் ஊருக்குள்ளாகவே எதிர் எதிரான பறை முழக்கம். இன்னும் தெளிவாகச் சொன்னால் ஒரு வீட்டுக்குள்ளேயே எதிர் எதிராக பறை முழக்கம். ஆனால், அது வீட்டுப்போர் அன்று! நாட்டுப் போராகிவிட்டது. 'சிறுபொறி பெருந் தீ' என்பது பழமொழி அல்லவா.

உயிர் நட்பு :

பாண்டிய நாட்டுப் பிசிராந்தையாரிடம் 'உம் பெயர் என்ன?' என்று எவரேனும் கேட்டால் ‘என் பெயர் கோப்பெருஞ்சோழன்' என்பார். கோப்பெருஞ்சோழனிடம் 'உன் பெயர் என்ன?' என்று

1. திருக்குறள் : 61.