உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

வினாவினால் 'என் பெயர் பிசிராந்தையார்' என்பான். ஆனால் அவர்கள் கண்டறிந்தது இல்லை; கேட்டறிந்த அளவே உண்டு. உணர்ச்சியால் ஒன்றுபட்ட அவர்கள் நட்பு உயிர்நட்பு ஆகியது. உலகவழக்கில் உயிர்நட்பு என்று கூறுவது போலவா? சோழன் வடக்கிருந்த போது தாமும் வடக்கிருந்து இறந்து தம் 'உயிர் நட்பு' என்பதை உலகறியச் செய்துவிட்டாரே பிசிராந்தையார்.

களத்தில் கைகலப்பு :

பாண்டிய நாட்டு அறவோர் சோழன் மேல் உயிரன்பு கொண்டார். சோழன் மைந்தரோ அவனுக்குப் பகையாக நின்றனர். தந்தையைப் பகைவன் ஆக்கிப் பறையும் சங்கும் முழங்க நாற்படை களையும் ஏவிப், போர்க்களத்தில் நிற்கின்றனர். அரசன் மைந்தர் களது அறமற்ற செயலால் நாட்டுமக்கள் அழிவுக்கு ஆளாக இருக்கின்றனர். இந்நிலை எவருக்கே இன்பந்தரும்? முன்னைப் பகைவராக இருக்கும் பிறநாட்டவர்க்கு வேண்டுமானால்

ன்பமாக இருக்கலாம். உள்நாட்டில் வாழும் நன்னெஞ்சி னர்க்குப் பெருந்துயராக இருந்தது. ஆனால் அதைத் தடுப்பது அவ்வளவு எளிய செயல் அல்லவே. களத்தில் அல்லவோ இருதிறத்துப் படைகளும் கைகலக்க நிற்கின்றன.

படைக்கடலில் பாவலர் :

படைக்கடலின் இடையே ஒரு புலவர் வருகிறார். அவர் பெயர் புல்லாற்றூர் எயிற்றியனார் என்பது. மைந்தர் நிற்கும் பக்கத்தைப் புலவர் நோக்கவில்லை. தந்தையின் பக்கம் சென்றார். அவர் கையைப் பற்றினார். பாகன் பின்னே செல்லும் யானையைப் போல் பாடும் புலவர் பின்னே சென்றான் கோப்பெருஞ்சோழன்.

வேந்தன் போர்க்களத்தை விட்டு வெளியேறவும் ஆரவாரத் துடன் நின்ற வீரர்கள் அடங்கினர். புலவர், அமைதிப் பணியைத் தொடங்கினார்.

"போராற்றலும் வெற்றித் திறமும் வாய்ந்த வேந்தே! நின்னை எதிர்த்து வந்து நிற்கும் இருவரையும் எண்ணினால் நின்பகைவர் அல்லர்; நீயும் அவர்கட்குப் பகைவன் அல்லை. பகைமை பாராட்ட வேண்டாத இருதிறத்தார்கள் பகைத்து நின்றால் உண்மைப் பகைவர்களுக்குப் பெருமகிழ்ச்சியாக இருக்கும் அல்லவா!