உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறவோர் அமைதிப் பணிகள்

115

"அஃதிருக்கட்டும், எத்தகையவர் வாழ்வுக்கும் ஓர் எல்லை யுண்டே. நீயும் ஒரு நாள் விண்ணுலகு அடைவது உறுதி. அக் காலத்தில் உன் நாட்டுரிமை எவர்க்கே சேரும்? இவர்களுக்கே உரிமைப்பட்டது அல்லவா!

"புகழ் மிக்க வேந்தே! கேள். இப்பொழுது எதிர்க்கும் இவ்விருவரும் நின்னிடம் தோற்று நீ வென்றால் அவ்வாட்சியை எவர்க்கே தருவாய்? வேற்றவர்க்குத் தர உன் உள்ளம் விழையுமா?

மற்றொன்று; வேந்தே! நீ ஒரு வேளை இவர்கட்குத் தோற்று விட்டால்! நினைக்கவே நாணமாக இருக்கிறது. உன் பகைவர்கள் மகிழ அதற்கு மேலும் என்ன வாய்ப்பு வேண்டும்?

"அரசே! போரை ஒழிப்பாயாக; நாட்டு மக்களை நலிக்கா திருப்பாயாக; விண்ணுலகோர் விரும்பி ஏற்கும் விருந்தாளன் ஆவாயாக" என்றார் புலவர் எயிற்றியனார்.

புலவர் உரையைத் தன் செவிக்கண் ஏற்றான் சோழன். நாட்டின் நல்வாழ்வும், வீட்டின் நற்பேறும் கருதிப் புலவர் இருந்த போர் ஒழிந்தது. புல்லாற்றூரார் தொண்டு பல்லாயிரம் பேர் களைச் சாவில் இருந்து காத்தது. ஒருவரை ஒருவரே காக்க அரிய நிலையில், பல்லாயிரம் பேர்களை ஒருவர் காப்பதென்பது எளிமை யானதா?

சேர நாட்டில் சோழ வேந்தன் :

கோப்பெருஞ்சோழன் இருந்தாண்ட உறையூரையே தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான், இன்னொரு வேந்தன். அவன் கோவேந்தனாகவும் பாவேந்தனாகவும் விளங்கினான். புலவர் தோழனாகவும், நல்லோர் நண்பனாகவும் திகழ்ந்தான். அவன்,மலையமான் காரியின் மக்களை யானைக் காற்கீழ்க் கிடத்திக் கொல்ல முயன்ற போது கோவூர்கிழார் காத்த அருட் செயலை முன்னர்க் கண்டோம். அக்கிள்ளி வேந்தன் சேர நாட்டுக் கருவூர் மேல் படையெடுத்துச் சென்றான்.

தடையொன்றும் இன்றிச் சேரன் தலைநகர் வரை சென்றான் சோழன். சேர அரசன் அது வரை என்ன செய்தான்? தக்க காவலாகத் தன் அரண்மனையைக் கொண்டு உள்ளேயே பதுங்கி இருந்தான். அஞ்சிய பகையைத் தாக்க முனைவது ஆண்மை அன்று என்று சோழன் நினைத்திருக்க வேண்டும்; போரை நிறுத்தி ருக்கவேண்டும். அவ்வாறு அவன் செய்யவில்லை. ஆகவே போரை நிறுத்த வேண்டுவது அறவோர் கடன் ஆயிற்று.